ஸ்ரீ லங்கா சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின் கிழக்குமாகான கராத்தே சுற்றுப்போட்டி நேற்று 12. 06. 2016 இல் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உள்ளக அரங்கில் நடைபெற்றதாக ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் கிழக்கு மாகாண தலைவர் முகம்மத் இக்பால் தெரிவித்தார்.
இச்சுற்று போட்டிக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்கலும், கௌரவ அதீதியாக மாணவ நலன் பிரிவு பணிப்பாளர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்து வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதள்களும், பதக்கங்களும் வழங்கி வைத்தார்கள்.
அத்துடன் 11.06.2016 இல் அக்கரைப்பற்று ஆர்.கே.எம் வித்தியாலயத்தில் நடைபெற்ற நடுவர் கருத்தரங்கில் கறுப்பு பட்டி சிரேஷ்ட மாணவர்களுக்கான நடுவர் கருத்தரங்கும், நடுவர் பரீட்ச்சையும் நடைபெற்றது. அப்பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான சான்றிதள்களும் குறித்த சுற்றுப்போட்டி நிகழ்வில் பேராசிரியர் நாஜிம் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. என்று கிழக்கு மாகான கராத்தே சம்மேளன தலைவர் முகம்மத் இக்பால் அவர்கள் தெரிவித்துள்ளார்.