எம்.எல்.பைசால் (காஷிபி)
ஒலுவில் கிராமத்தில் உலமாக்களின் தலைமையில் இளைஞர்களையும்,மற்றும் பிரமுகர்களையும் இணைத்து “ஜமிய்யத் தாறுல் கைர்” எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது அல்-ஹம்துலிலாஹ். இவ்வமைப்பு அண்மைக் காலமாக அக்கிராமத்தில் சில செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் இம்முறை ரமளான் மாதத்தில் மாணவர்களின் ஷரீஆ பற்றிய அறிவினை மேம்படச் செய்யவேண்டும் என்பதற்காக "புனித ரமளான் விசேட ஷரீஆ வகுப்புக்களை" நடாத்தவுள்ளது.
இவ்வகுப்புக்கள் மூன்று தரப்பினர்ளை மைய்யமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலாவது பிரிவில் அறபுக் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இஸ்லாமிய அகீதா பற்றிய கருத்தரங்கும், இரண்டாவது பிரிவில் 10 ம் 11ம் தரங்களில் கல்வி பயிலும் மாணவர்களிடையே "ஸஹாபா" என்ற தலைப்பிலான கருத்தரங்கும் ,மூன்றாவது பிரிவில் குர்ஆன் மத்ரசா மாணவர்களுக்கான குர்ஆன் மனன போட்டியும் நடாத்த திட்டமிடப் பட்டுள்ளதாக தாறுல் கைர் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் இதில் கலந்து கொள்வோருக்கான சான்றிதழ்கள்,பரிசில்கள் என வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விடுமுறையில் உள்ள மாணவர்களுக்கு ரமளானை இஸ்லாமிய சூழலில் கழிப்பதற்கான ஏற்பாடாகவும்,சிறியவர்களை குர்ஆனுடன் தொடர்பினை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் இவ்விசேட வகுப்புகள் அமையலாம் இன்ஸா அல்லாஹ்.