மக்களின் அபிலாசைகளுக்கு முட்டுக்கட்டை போடும் அரசியல்வாதியாக இருக்கமாட்டேன் - பிரதி அமைச்சர் ஹரீஸ்

எம்.வை.அமீர் -
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உளச்சுத்தியுடன் செயற்பட்டுவருவதாகவும், அதற்கான செயற்பாடுகளை தாங்கள் தீவிரப்படுத்தி வருவதாகவும், பிரதமர் மற்றும் சம்மந்தப்பட்ட அமைச்சர் போன்றோரை சந்தித்து அதனை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் அபிலாசைகளுக்கு முட்டுக்கட்டை போடும் அரசியல் வாதியாக நான் இருக்கமாட்டேன் என்றும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிராத்தித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில் 2016-06-03 ஆம் திகதி அப்பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.பைசால் தலைமையில் இடம்பெற்ற பாடசாலையின் புதிய நுழைவாயிலை திறந்துவைக்கும் நிகழ்வும் திறமைகாட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த கால ஆட்சியில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உயர் பொலிசார் ஒருவரின் சேட்டுக்குழறை பிடித்து இழுத்தபோது, யாரும் இங்கு கூக்குரலிடவில்லை. அதே நேரம் எங்களுடைய கிழக்குமாகாண முதலமைச்சர் தன்னுடைய கெளரவத்துக்காக வாதாடியபோது, அவர் ஒரு முஸ்லிம் என்பதால் தீவிர போகுக்கொண்டோர் அதற்க்கு எதிராக பெரும் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். நல்ல வேளை ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் ஆட்சியில் இருப்பதனால் குறித்த பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டது. 

இவ்வாறான சூழலில் கோத்தபாய ராஜபக்ச செயலாளராக இருந்து இருந்தால் முதலமைச்சரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இருப்பார். இதுதான் உண்மை. நாட்டில் நல்லாட்சிதான் நடைபெறுகின்றது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டே கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதலமைச்சருக்கு கடற்படை முகாமில் விருந்துபசாரம் வழங்கப்பட்டதாகும் என்று தெரிவித்த பிரதி அமைச்சர் ஹரீஸ்,

கடந்தகால ஆட்சியின்போது முன்னாள் அமைச்சர் டக்லஸ் தேவானாந்தா போன்றோர் தமிழ் பிரதேசங்களில் பாரியளவில் அபிவிருத்திகளை செய்தனர், வேலைவாய்ப்புக்களை வழங்கினர், ஆனால் தமிழ் மக்கள் எவ்வளவோ இழப்புகளை சந்தித்தும், குறித்த பிரதேசங்களின் அபிவிருத்திகளின் எந்த பங்கும் கொள்ளாமல் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரித்தார்கள் என்றால் அதில் முக்கிய செய்தி ஒன்று உள்ளது என்பதை நாங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஆனால் முஸ்லிம்களுக்கு சிறந்த தலைமைத்துவத்துடன் ஒரு கட்டமைப்பு இருக்கின்ற இவ்வேளையில் அதனை சீர்குலைக்கும் நோக்குடன் விமர்சிக்கக்கூடியவர்களாக சிலர் இருக்கின்றனர். இவ்வாறானவர்கள் மீது மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதுடன் அவர்களது பின்னணிகள் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது.

2016ஆம் ஆண்டு முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாதமாக இருக்கப் போகின்றது. இலங்கை முஸ்லிம்களின் தலையெழுத்தை தீர்மானிக்கப் போகும் ஒரு மாதமாகவும் இந்த ஆண்டு இருக்கப்போகின்றது.

இந்த நாட்டின் அரசியலைமை மாற்றவேண்டும், தேர்தல் முறையை மாற்றவேண்டும், தொகுதிமுறை தேர்தல் முறை கொண்டுவரப்படவேண்டும், 160 பாராளமன்ற உறுப்பினர்களை 140 ஆகக் குறைக்கவேண்டும். என்ற தீர்மானங்களில் ஜனாதிபதியும் பிரதமரும் ஒற்றைக்காலில் நிற்க்கின்றனர். இவ்வாறான சூழலில் சிறுபான்மையினரான நாங்கள் பாதிக்கப்படப்போகின்ற விடயம் எங்களில் சிலருக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. 

இவ்வாறான விடயங்களுக்கு காத்திரமான ஆலோசனைகளை வழங்குவதற்கு இவர்கள் முன்வருவதில்லை என்றும் எதிர்காலத்தில் யார் பிரதிநிதிகளாக இருந்தாலும் நமது சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் எல்லா உயர் சபைகளிலும் இருக்கவேண்டும் என்ற அடிப்படையிலேயே ஸ்ரீலங்கா முச்ளிம்கான்கிரஸுக்கும் அதன் தலைமையும் பயனிப்பாதாக தெரிவித்தார்.

வடக்குக்கிழக்கு இணைப்பு அதிகாரப்பகிர்வு என்றெல்லாம் சர்வதேசம் நமது நாட்டுக்கு அழுத்தங்களை கொடுத்துவரும் இவ்வேளையில் அவ்வாறான தீர்வுகள் எட்டப்படும்போது இங்கு வாழும் முஸ்லிம்கள் தொடர்பிலும் அவர்களுக்கான நியாயமான உரிமைகளை பெற்றுக்கொள்ளக்கூடியவாறு எங்களது பிரதிநிதித்துவங்கள் அமையவேண்டும் என்ற இலக்கை நோக்கி முஸ்லிம் காங்கிரஸ் நகர்வதாகவும் தெரிவித்தார்.

மிக முக்கியமான இந்தகாலகட்டத்தில் எங்களுக்குள் முரன்பட்டுக்கொள்ளாமல் எங்களது உரிமைகளை பெற்றுக்கொள்ள அணிதிரளுமாறு அறைகூவல் விடுத்தார்.

நிகழ்வுக்கு கௌரவ அதிதிகளாக கல்முனை கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீலும் கல்முனைப் பிராந்திய பிரதம மின் பொறியியளாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான் அவர்களும் கலந்து உரையாற்றியதுடன், உயர் அதிகாரிகளும் மாணவர்களும் பெற்றோரும் கலந்துகொண்டனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -