அஷ்ரப் ஏ சமத்-
கடந்த 08ஆம் திகதி நடைபெற்ற ''பூவரசி விருதுகள்- 2016'' நிகழ்வில் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் ஜனநாதன் அவர்களால் சிறந்த இலத்திரனவியல் ஊடகவியலாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கும் நண்பர், அறிவிப்பாளர் இலங்கை வசந்தம் மற்றும் .ரீ.என் தொலைக்காட்சி தமிழ்செ ய்திப்பிரிவு பொறுப்பதிகாரி, எம்.எஸ்.எம்.இர்பான் தமிழ் மிரா் நாளாந்த பத்திரிகையின் பிரதம ஆசிரியா் திரு. மதன் ஆகியோறுக்கும் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வினை இலங்கை எழுத்தாளா் ஈழவானி ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் 5 நுால்களும் வெளியீட்டு வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் எழுத்தாளா் கனேசதுறையின் ” சாபமும் சக்கரவத்தியும் .இலங்கைமன்ணன் ”சர்வதேச மனித உரிமைச்சாசனம்” கிருஸ்னப்பிள்ளையின் ”நானும் என்னைப் போன்ற அவளும், ஈழப்பிரியனின் ”பெயரிலி”. கௌரி ஆனந்தனின் ”மொழிந்த விழிகள்” எனும் ஜந்து நுால்களும் வெளியீட்டு வைக்கப்பட்டன.