நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கைது செய்யப்பட்டமைக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கையை எடுக்க போவதாக பிவித்துரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டே உயத கம்மன்பில கைது செய்யப்பட்டதாக அந்த கட்சியின் பிரசார செயலாளர் சட்டத்தரணி துஷார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கம்மன்பிலவை கைது செய்த அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
போலி அட்டர்னி பத்திரம் மூலம் அவுஸ்திரேலிய பிரஜையான பிரையன் செடிக் என்பவருக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றின் பங்குகளை விற்பனை செய்ததாக மேற்கொள்ளப்பட்டிருந்த முறைப்பாட்டீக்கு அமைய உயத கம்மன்பில கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.