மக்களுக்குரிய தனியார் காணிகளை அவர்களுடைய வீட்டுத் தேவைகளுக்காக விவசாய தேவைகளுக்காக இருக்கின்ற தரிசு நிலங்களை படை முகாம்கள் ஆக்கிரமித்திருக்கின்ற நிலை இல்லாமல் செய்யப்பட வேண்டும் அமைச்சர் ரவூப் ஹக்கீம்
வட கிழக்கு பிரதேசங்களில் படை முகாம்கள் முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்று சொல்லப்படுவது சம்பந்தமாக எங்களுடைய நிலைப்பாடு பாதுகாப்பு தேவைக்காக அவசியமாக குறைந்தபட்ச முகாம்கள் அமைவதில் பற்றி எந்த எந்த ஆட்சேபமும் கிடையாது. இருந்தாலும் பல இடங்களில் தேவைக்கு அதிகமான நிலங்களை ஆக்கிரமிக்கும் நிலைகள் தொடர்வது சம்பந்தமாக மக்கள் மத்தியில் குறைகள் இருக்கின்றது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
வட கிழக்கில் உள்ள படைமுகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்ற பேச்சு பரவலாக பேசப்படுகின்றது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் என்ற வகையிலும் கிழக்கில் உங்களுக்கு பாரிய மக்கள் ஆதரவு உள்ளது ஆகவே படை முகாம்களை அகற்றுவது பற்றி உங்கள் கருத்தை தெரிவிக்குமாறு இன்று (13) கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் கண்டி பிரதேச செயலகத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலலிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவிக்கையில்,
ஒருவருடைய தனியார் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன. மக்களுடைய பயிர் செய்கைக்கான காணிகளை படையினர் தங்கள் பயிர்செய்கை முகாம்களை நடத்துகின்ற நிலவரங்கள் காணப்படுகின்றன. அதேபோல் உள்ளாச பயண விடுதிகள், ஹோட்டல்கள் நடத்திக்கொண்டிருக்கின்ற நிலவரம் இவற்றிலிருந்து விடுபட்டு படைமுகாம்களுக்கு தேவையான குறைந்த பட்ச நிலப்பரப்பில் அவர்களுடைய முகாம்கள் அமைப்பதில் எங்களுக்கு ஆட்சேபம் கிடையாது. ஆனால் மக்களுக்குறிய தனியார் காணிகளை அவர்களுடைய வீட்டுத்தேவைகளுக்காக விவசாய தேவைகளுக்காக இருக்கின்ற தரிசி நிலங்கைள படை முகாம்கள் ஆக்கிரமித்திருக்கின்ற நிலவரம் இல்லாமல் செய்யப்பட வேண்டும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசு முலுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்னுடைய கோரிக்கை என அமைச்சர் தெரிவித்தார்.
-ஷபீக் ஹுஸைன்-