அரசியலில் பல பின்கதவுகளை கண்டவர் அமீர் அலி...!

 27 ஜூன் 2016 இல் வீரகேசரி பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் முன்னாள் ஏறாவூர் பிரதேச சபையின் உறுப்பினரும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மத்திய குழு உறுப்பினருமாகிய M.உசனார் (J.P) அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்,

பிரதியமைச்சர் அமீரலி அவர்கள் அரசியலில் ஒரு வங்குரோத்துக்காரர். அரசியலில் பல பின்கதவுகளை தட்டித் திறந்த முன்மாதிரி இவருடைய அரசியல் வரலாற்றிலேயே நிறைந்து காணப்படுகின்றது. அதிகாரம் எதுவென்று தெரியாமல் தத்தளிக்கின்ற இவர் போன்றவர்களுக்கு கௌரவ முதலமைச்சர் அவர்கள் அரசியல் அதிகாரப் பிரயோகம் பற்றி பல முன்மாதிரியான பாடங்களை பிரதியமைச்சர் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசோடு இணைந்தபோது, கட்சியின் தலைமைக்கு மத்தியிலும், பொதுமக்கள் முன்னிலையிலும் ‘’இக்கட்சியை விட்டு நான் வெளியேறுவேனாக இருந்தால்,என் தாயோடு விபச்சாரம் செய்வதற்கு சமமானது ‘’ என்று கூறியிருந்தார் இந்த பிரதியமைச்சர். கடந்த மகிந்த அரசாங்கத்தில் கடைசித் தருணத்தில் பின்கதவால் சென்று பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்ற கையோடு வேறு ஒரு கட்சிக்கு தாவி முழு முஸ்லிம் சமூகத்தையும் தேர்தல் மேடைகளில் மிகவும் மோசமாக சிங்களவர்கள் விமர்சிப்பதற்கு காரணமாக இருந்ததோடு, சிங்களவர் ஒருவரது வாயால் முனாபிக் என்று திட்டு வாங்கிய ஒரு நபர் அது அமீரலி தான்.

அதிகார மமதை பற்றிப் பேசுகின்ற இந்த அமீரலி கல்குடா பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளர்களின் வீடுகளுக்கும் உயிர்களுக்கும் சேதம் விளைவித்தவர். இவர் எப்படி ஒரு நல்ல அரசியல்வாதியாக இருக்கமுடியும். தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றி பேசுகின்ற இந்த அமீரலி, கடந்த காலங்களில் மகிந்தவின் அரசியல் அதிகாரத்தினை வைத்துக்கொண்டு முஸ்லிம் படையணி என்ற பெயரில் பல முஸ்லிம் இளைஞர்களை பலி கொடுத்த பெருமையும் இந்த பிரதியமைச்சரையே சாரும்.

அரசியலில் பந்தா காட்டுகின்ற செயற்பாடும் இவரிடம் நிறையவே காணப்படுகின்றது. அண்மையில் திறக்கப்பட்ட ஓட்டமாவடி மீன் சந்தைக் கட்டடமானது கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் அபிவிருத்திச் செயற்பாடுகளில் ஒன்றே தவிர அமீரலியினுடைய முயற்சியினால் கிடைக்கப்பெற்ற ஒன்றல்ல. இந்நாட்டின் உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு அரசாங்கமும், பல உள்ளூர் வெளியூர் நிறுவனங்களும் உதவி வருகின்றன. 

அந்த வகையில் இந்த சந்தைக் கட்டடமானது நெல்சிப் திட்ட நிதி உதவியின்கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டதாகும். எனவே தான் உள்ளூராட்சி மன்றங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இதுவரை காலமும் மக்களின் பாவனைக்காக இன்னும் பல வசதிகளை செய்து கொடுத்ததன் அடிப்படையிலேயே இந்த சந்தைக் கட்டடமானது முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த சந்தைக் கட்டடத்துக்கான மின்சார வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்குக்கூட பிரதியமைச்சர் அவர்கள் பல தடைகளை ஏற்படுத்தியிருந்தார். 

இத்தடைகள் அனைத்தையும் முறியடித்தே முதலமைச்சர் அவர்கள் இச் சந்தைக் கட்டடத்தை திறந்து வைத்தார்கள். கொந்தராத்துக்களுக்கு பல கொமிசன்களை பெற்றுக்கொள்கின்ற இந்தப் பிரதியமைச்சர் போன்றவர்களுக்கு நல்ல முன்மாதிரி அரசியலை காட்ட வேண்டிய தேவைப்பாடு நம் அனைவருக்கும் இருக்கிறது என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -