எப்.முபாரக்-
திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் போலியான பள்ளிவாயல் கடிதங்களை காட்டி பணம் வசூலித்த சந்தேக நபர் ஒருவரை புதன்கிழமை (8) மாலையில் கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மன்னார்வீதி, புத்தளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரேயே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் புத்தளம் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாயல் ஒன்றில் போலியான முறையில் தயாரித்த கடிதத்தில் பணம் வசூலித்து வந்த நிலையிலேயே கந்தளாய் நகரிலும் பணம் சேகரித்த வேளையில் கடைக்காரர் ஒருவருக்கு குறித்த சந்தேக நபரின் கடிதத்தின் மேல் சந்தேகம் எழவே பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபர் வைத்திருந்த கடிதத்தில் தொலைபேசி இலக்கங்களும் இல்லையெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு இன்று வியாழக்கிழமை (9) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.