கொஸ்கம இராணுவ முகாமில் இன்று காலையும் மீண்டும் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இன்று இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் இந்த சம்பவத்தால் ஒரு இராணுவ வீரர் காயமடைந்ததாக தெரிவித்தார்.
கடந்த 05 ஆம் திகதி மாலை கொஸ்கம, சாலாவ இராணுவ களஞ்சிய சாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் காரணமாக பலர் பாதிக்கப்பட்டதுடன், முகாமை சுற்றியுள்ள பொதுமக்களின் உடைமைகள் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.