எஸ்.எம்.சன்சீர் (இறக்காம் செய்தியாளர்)-
அம்பாரை சர்வோதய (EU SDDP/ Unicef) மற்றும் சுகாதார திணைக்களமும் இணைந்து நடாத்திய சிறுவர் துஷ்பிரயோகம், இளம்வயது திருமணம், போசாக்கின்மை சம்மந்தமான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நேற்று (25) காலை இறக்காம சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் சுகாதார வைத்திய அதிகாரி னுச.ஐ.டு.ஆ.றஸீன் தலைமையில் இடம்பெற்றன.
இன்நிகழ்வின்போது தாய் சேய் நலன் திட்ட அதிகாரி வைத்தியர் எம்.ஏ.சீ.எம் பஸால் வளவாளராக கலந்து கொண்டார் மற்றும் இறக்காம பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயசலாளர் எப். நஜீஹா முஸபீர் மற்றும் பீ.எஸ்.றேகா(மாவட்ட திட்ட இணைப்பாளர்) தாய் சேய் சுகாதார நலன்திட்டம் அம்பாரை சர்வோதய, (EU SDDP/ Unicef) ரீ.பரீஹா பேகம் (கள சுகாதார அழகு படுத்துனர்) சர்வோதய(EU SDDP/ Unicef)அம்பாரை கிராம உத்தியோகஸ்தர்கள் சமூக தலைவர்கள்இமற்றும் மார்க்க அறிஞ்ஞர்களும் கலந்து கொண்ட இந்நிகள்வானது மக்கள் தொடர்புடைய முக்கிய பிரமுகர்களைக்கொண்டே இந்நிகள்வு நடைபெற்றது.
இதன்போது உரை நிகழ்த்திய தாய் சேய் நலன் திட்ட அதிகாரி வைத்தியர் பஸால் தெரிவிக்கையில் இலங்கையில் 8% ஆண் குளந்தைகளும் 2% பெண் குளந்தைகளும் சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தார்.