இனிமேல் பரீட்சைகளுக்கு விண்ணப்பித்தபின்பு பெயர்மாற்றம் செய்யமுடியாது..!

காரைதீவு நிருபர் சகா-
னிமேல் இலங்கையின் பொதுப்பரீட்சைகளுக்கு விண்ணப்பித்தபின்பு பெயர்மாற்றம் செய்யும் நடைமுறை நீக்கப்பட்டுள்ளது. எனவே அதிபர்கள் விண்ணப்பதாரிகள் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும்போது தமது பெயரை தமது பிறப்பத்தாட்சிப்பத்திரத்திலுள்ளவாறு சரியாக நேர்த்தியாக எழுதவேண்டும்.

இவ்வாறு இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஸ்பகுமார அறிவுறுத்தியுள்ளார்.

திங்களன்று கொழும்பு பரீட்சைத்திணைக்களத்தில் இலங்கையின் சகல வலய கல்விஅதிகாரிகளுக்கும் நடாத்தப்பட்ட கூட்டத்தில் இவ்விடயம் அறிவுறுத்தப்பட்டது.

பரீட்சை ஆணையாளர் மேலும் கூறுகையில்:

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை க.பொ.த. சா.த. மற்றும் க.பொ.த. உ.தரப்பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும்போதுஅதிபர்கள் கூடுதலான கவனத்தைச் செலுத்தவேண்டும்.

அதனை கல்வியதிகாரிகள் கண்காணித்தல் வேண்டும் .

கடந்தகாலங்களில் இருந்துவந்த பெயர்மாற்றம் செய்யும் சந்தர்ப்பம் இவ்வருடத்துடன் நீக்கப்பட்டுள்ளது.எனவே 2017முதல் பெயர்மாற்றம் செய்யமுடியாது.

அதிபர் வைத்திருக்கமுடியாது!

பரீட்சைகளுக்கான மாணவர் அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறும்பட்சத்தில் கிடைத்த அன்றோ அல்லது மறுநாளோ அவற்றை சகல மாணவர்களுக்கும் வழங்கிவிடவேண்டும்.

எந்தக்காரணம்கொண்டும் அதிபர்கள் அனுமதிஅட்டைகளை தம்வசம் வைத்திருக்கக்கூடாது. கடந்த காலங்களில் இன்னொரன்ன காரணங்களை கூறிக்கொண்டு சில அதிபர்கள் அனுமதி அட்டைகளை வழங்காமல் இழுத்தடித்தமையும் நிதிபெறும் நோக்கில் தாமதித்தமையும் முறைப்பாடாக கல்வியமைச்சிற்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதாவது முறைப்படி விண்ணப்பித்து அனுமதிஅட்டை கிடைக்கபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் அவை வழங்கப்படவேண்டும்.இதனை கல்வியதிகாரிகள் உறுதிப்படுத்தவேண்டும்.

ஓ.எல்.பரீட்சைக்கு புதிய வினாப்பத்திரங்கள்!

இவ்வருடம் க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கும் தோற்றும் மாணவர்க்கான பாடத்திட்டமாற்றப்படி புதியமுறை வினாத்தாள் கட்டமைப்பு மாற்றம் தொடர்பாகவும் முன்மாதிரிவினாக்கள் தொடர்பிலும் இறுவெட்டு மற்றும் புத்தகங்கள் வாயிலாக சகல வலயங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

அவற்றை முறைப்படி உரிய துறைசார்ந்த கல்வி அதிகாரிகள் ஆசிரியஆலோசகர்கள் ஊடாக உரிய அதிபர்கள் பாடஆசிரியர்களுக்கு எத்திவைத்து மாணவர்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்தவேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -