இவர் தனது 73 ஆவது வயதில் இராஜகிரியவில் உள்ள அவருடைய இல்லத்தில் இன்று (15) மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு சோமவன்ச அமரசிங்க மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பதவியிலிருந்து விலகியதுடன், கட்சியிலிருந்தும் விலகியுள்ளார்.
விஜேவீரவுக்கு பிறகு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவராக சிலர் பணியாற்றியிருந்தாலும் அந்த கட்சியின் நான்காவது தலைவரான சோமவங்ச அமரசிங்க, சில தசாப்தங்கள் அந்த கட்சியின் தலைவராக பணியாற்றினார். இலங்கை அரசியலில் அவரது பங்களிப்பு வராலாற்றில் பதியப்படக் கூடியது என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் விடுதலை முன்னணி தனது சம்பிரதாய கொள்கைகளுக்கு புறம்பாக செயற்படுவதாக குற்றம் சுமத்தி அந்த கட்சியில் இருந்து விலகிய சோமவங்ச, மக்கள் சேவை என்ற கட்சியை ஆரம்பித்து புதிய பயணத்தை ஆரம்பித்தார்.
களுத்துறை பாடசாலையில் கல்வி கற்ற சோமவங்ச, 1969 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்து கொண்டார். இதனையடுத்து 1984 ஆம் ஆண்டு கட்சியின் அரசியல் சபை உறுப்பினராக பதவி வகித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் 14 அரசியல் சபை உறுப்பினர்களில் சோமவங்ச அமரசிங்க மாத்திரமே உயிருடன் பிழைத்தார். ஏனையோர் 87 ஆம் 89 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கிளரச்சியின் போது கொல்லப்பட்டனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சி தோற்கடிக்கப்பட்ட பின்னர், இலங்கையில் தப்பிச் சென்ற அவர் நீண்டகாலமாக வெளிநாட்டில் வாழ்ந்து வந்தார்.