அஹமட் இர்ஷாட்-
இந்திய இலங்கை ஒப்பந்தத்தால் பிரட்சினைக்கு தீர்வில்லை என தெரிவித்தார் திருகோணமலை ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் நேற்று வெள்ளிகிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மீள்குடியேற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார் அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்.
இலங்கையின் ஏனைய மாகாணங்களை விட வடக்கு கிழக்கு மாகாணங்கள் எல்லோராலும் அடிக்கடி பேசப்பட்ட பேசப்படுகிற மாகாணங்களாக மாறிவிட்டன இங்குள்ள மாவட்டங்களிலே மூவின மக்களும் வாழ்கின்றனர் எனினும் தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
கடந்தகாலங்களில் இலங்கை அரசியலில் ஏற்பட்டுவந்த புறக்கணிப்புகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பயங்கரவாதத்தை தோற்றுவித்தது இதனால் இந்நாட்டின் வளங்கள் பல அழிக்கப்பட்டன கல்விமான்கள் பெரும் அரசியல் தலைவர்கள் உட்பட ஏராளமான அப்பாவிகளும் கொல்லப்பட்டனர்.
திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை எனது தந்தை முன்னால் இராஜாங்க அமைச்சர் மர்ஹும் எம் ஈ எச் மஹரூப் முன்னால் தகவல் ஒலிபரப்பு பிரதியமைச்சர் மர்ஹும் ஏ எல் அப்துல் மஜீத் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் தங்கதுரை என பலர் கொல்லப்பட்டனர்.
இப்பிரட்சினைக்கு தீர்வு காணவென பல்வேறு முன்னெடுப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன அவற்றுள் ஒன்று இந்திய இலங்கை ஒப்பந்தம் இந்திய இலங்கை ஒப்பந்ததோடு இந்த இரு மாகாணங்களும் இணைக்கப்பட்டு தனியான மாகாண சபை நிர்வாகம் இங்கு இடம்பெற்றது எனினும் அது பிரச்சனைக்கு தீர்வாக இருக்கவில்லை பிரட்சினை தொடர்ந்தது இதனால் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் என எல்லாதரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.
இன்று பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது நாட்டில் நல்லாட்சி நடக்கிறது எனவே இம்மாகாண மக்கள் எதிர்நோக்கும் பிரட்சினைகளுக்கு தீர்வுகாணப்படவேண்டிய அவசியம் உள்ளது.
நாம் 1948ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தாலும் இன்னும் நாம் எதிர்பார்க்கும் இலக்கை அடையமுடியவில்லை ஆனால் நம்மைவிட ஆனால் நம்மைவிட பிந்தி சுதந்திரம் பெற்ற நாடுகள் இன்று முன்னேறிவிட்டன.
நம்மிடையே உள்ள பிரட்சினைகளே இதற்கு காரணம் எனவே இவற்றை விட்டுவிட்டு நாமும் முன்னேற வேண்டும் இதற்காக ஒரே இலங்கையர் என்ற நிலைப்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் இது வெறும் பேச்சளவிலே மட்டும் இல்லாது உண்மையாக ஏற்படுத்தப் பட வேண்டும்.
இந்த நாட்டிலே எழுதப்படாத சட்டங்களாக இருக்கின்ற சிலவற்றை அகற்ற வேண்டும் உதாரணாக திருகோணமலை அம்பாறை மாவட்டங்களிலே தமிழ்பேசும் மக்கள் அதிகமாக வாழ்ந்துவந்தாலும் அங்கு தமிழ்பேசும் அரசாங்க அதிபர்கள் நியமிக்கப்படுவதில்லை இப்படியான மனோநிலை மாற்றப்பட வேண்டும் திறமையானவர் யாரும் எங்கும் நிர்வாகம் செய்யும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.
அதேபோல இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்தோர் மட்டும் தான் நிர்வாகம் செய்ய வேண்டும் நிலை இருக்க கூடாது திறமையானவர்கள் வேறு சேவைகளில் இருந்தாலும் அவர்களது சேவையை நாட்டுக்கு பெற்றுகொடுக்க வேண்டும்.
பாதிப்புக்கு ஏற்ப மக்களுக்கு உறிய நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் இன்று மீள்குடியேற்றம் முக்கியமான விடயமாகும் திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை முஸ்லிம் மக்களது மீள்குடியேற்றமே இன்று தாமதமாக உள்ளது 250 க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் இன்னும் மீள்குடியேற்றப்ப வேண்டியுள்ளது இவ்வாறான பாகுபாடுகள் நீக்கப்பட வேண்டும்.
மீள்குடியேற்ற அமைச்சினால் இவ்வருடம் ஒதுக்கப்பட்ட நிதிகள் குச்சவெளி மூதூர் பகுதிகளில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்களுக்கு சரியான முறையில் ஒதுக்கப்படவில்லை கடந்தமாதம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இது வெளியிடப்பட்டது இதுபோன்ற புறக்கணிப்புகள் அகற்றப்படவேண்டும்.
படையினரால் பொதுமக்களது காணிகள் பல விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது ஆனால் இந்த நிலை முஸ்லிம் பகுதிகளில் ஏற்படுட்டப்படவில்லை குரங்குபாஞ்சான் சூரங்கள் பூவரசன்தீவு புல்மோட்டை மூதூர் தோப்பூர் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் காணிகள் இன்னும் படையினரால் விடுவிக்கப்படாமல் இருக்கின்றன இவையும் விடுவிக்கப்படவேண்டும்.
அபிவிருத்தியைப் பொறுத்தவரையிலும் திட்டமிடப்பட்ட அபிவிருத்திகள் தேவைப்படுகின்றன கடந்த அரசு காலத்தில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அவை தரமானதாக முன்னெடுக்கப்படவில்லை உதாரணாக திருகோணமலை மட்டகளப்பு வீதி பெருமளவு நிதியைக்கொண்டு புனரமைக்கப்பட்டது ஆனால் மூன்று வருடங்களுக்குள் அது சேதமடைந்துவிட்டது இப்போது இதனை மீள்புனரமைக்க பெருமளவு நிதி ஒதுக்கப்படவேண்டியுள்ளது இவ்வாறான குறைபாடுகள் அகற்றப்பட வேண்டும்.
பல்வேறு கிராமங்களில் வீதிகள் பாடசாலைகள் வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்பாவேண்டியுள்ளது இவை கவனத்தில் கொள்ளப்படவேண்டியுள்ளது இவை கவனத்தில் கொள்ளப்படவேண்டும் கடந்த முப்பது வருட பயங்கரவாத்ததால் பாதிக்கப்பட்ட விவசாய மற்றும் நீர்பாசன பகுதிகள் புனரமைக்கப்பட வேண்டியுள்ளது.
ஏராளமான இளைஞர் யுவதிகள் வேலைவாய்புகளின்றி இருக்கின்றார்கள் இவர்களுக்கு அரசாங்கத்தினால் மட்டும் வேலை வழங்க முடியாதது எனவே தொழில்பேட்டைகள் உருவாக்கப்பட்டு அவற்றின் மூலம் வேலைவாய்ப்புக்கள் வழங்கவேண்டும்.
பயங்கரவாதத்தின் வடுக்களில் ஒன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் உருவாக்கமாகும் இவ்வாறான குடும்பங்கள் பல்லாயிரம் இருக்கின்றன இவர்கள் விசேடமாக கவனத்தில்கொள்ளப்பட்டு தேவையான பரிகாரங்கள் காணப்பட வேண்டியுள்ளது.
சம்பூர் அனல்மின்நிலைய உருவாக்கம் தொடர்பாக பொதுமக்கள் தொடர்போராட்டங்களை நடத்திவருகின்றனர் எனவே அவர்களது உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்படவேண்டும் சரியான முடிவுகளை எட்ட வேண்டும்.
நமது எதிர்கால சந்ததிகளுக்கு பிரட்சினைகள் ஏதுமில்லாத நாட்டை நாம் விட்டுச்செல்லவேண்டும் நல்ல சிந்தனைகள் நல்ல மனோநிலைகளை உருவாக்கவேண்டும் சுயலாபங்களுக்காக மக்கள் உணர்வுகளை தூண்டி நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் கலாச்சாரம் அகற்றப்பட வேண்டும் அப்போதுதான் நாம் அபிவிருத்தியை விரைவில் காணமுடியும்.