வெற்வரி அதிகரிப்புபற்றி நாம் பலவருடங்களுக்கு முன்பே எதிர்வுகூறியிருந்தோம்- இம்ரான் MP

வெற்வரி அதிகரிப்புபற்றி நாம் பலவருடங்களுக்கு முன்பே எதிர்வுகூறியிருந்தோம் என தெரிவித்தார் திருகோணமலை ஐக்கியதேசிய காட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் இன்று வியாழக்கிழமை கிண்ணியா ரஹ்மானியா பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார் 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்;

வெற்வரி அதிகரிப்பால் பொதுமக்களாகிய நீங்கள் சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றீர்கள் என நாம் அறிவோம் இதில் மறைப்பதுகொன்றுமில்லை எமது நாடு இவ்வாறான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கும் என நாம் எதிர்கட்சியாக இருக்கும்போதே மஹிந்த அரசை எச்சரித்திருந்தோம் அவர்களின் திட்டமற்ற கண்காட்சி அபிவிருத்திகளின் விளைவையே நாம் இன்று அனுபவிக்கிறோம் வருமானம் தராத செயத்திட்டங்களுக்கு அதிக வட்டியுடன் கடன் வாங்கியுள்ளனர் ஹம்பாந்தோட்டை துறைமுகமும் விமான நிலையமுமே இதற்கு சான்று ஆனால் மஹிந்த அரசு செய்த தவறுக்கான தண்டனையை இன்று நாம் அனுபவிக்கின்றோம்

பாதாளத்தில் தள்ளப்பட்ட பொருளாரதாரத்தை தற்போது மீள கட்டியெழுப்பி வருகின்றோம் உடனடியாக பொருளாதாரத்தை தூக்கிநிறுத்த எமது அரசாங்கத்திலுள்ளவர்கள் யாரும் magic காரர்கள் இல்லை இதற்கு சில காலாவகாசம் தேவை வெளிநாட்டு உதவிகள் பல கிடைத்துவருகின்றன உலக வங்கியும் உதவ முன்வந்துள்ளது விரைவில் நாம் இதை சீர்செய்து வெற்வரியை நீக்குவோம் ஆனால் மஹிந்த அரசின் ஆட்சி தொடர்ந்திருந்தால் பல நாடுகள் பொருளாதார தடை விதிக்க தயாராகவிருந்தன அவ்வாறு நடைபெற்றிருந்தால் இன்றைய நிலை இதைவிட பலமடங்கு மோசமாகியிருக்கும் அந்த நிலைமையை நாங்கள் சீர்செய்துள்ளோம்

நாட்டை சீரழித்துவிட்டு தனக்கும் இதுக்கும் எவ்வித சம்மந்தமுமில்லாததுபோல் மஹிந்த ராஜபக்ச கருத்துதெரிவிக்கிறார் அவருக்கு புதுவகை வியாதியோன்று வந்துள்ளது எங்கு கெமரா மைக்கை கண்டாலும் நான்தான் யுத்தத்தை முடித்தேன் நான் மட்டுமே இந்நாட்டின் பாதுகாவலன் என கூறுகிறார் இதை கூறியே மீண்டும் ஆட்சிபீடம் ஏறலாம் என நினைக்கிறார் போல ஆனால் கடந்த இரு தேர்தல்களிலும் இதைகூறியும் வெற்றிபெறமுடியவில்லை அண்மையில் ஜப்பானுக்குச்சென்று அடுத்த பிரதமர் நானே என கூறியுள்ளார் முடிந்தால் அவரை கொழும்பு மாநகர சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று காட்டச் சொல்லுங்கள்

இவ்வாறான சமகால அரசியல் நிலவரங்களை மக்கள்முன் கொண்டுசேர்ப்பதில் இணையதளங்கள் கடந்தகாலங்களில் பெரும்பங்காற்றியது ஆட்சிமாற்றத்தில்கூட இணையதளங்களின் பங்கு அளப்பெரியது ஆனால் இன்று சில தமிழ் இணையதளங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது இரண்டு முஸ்லிம் கட்சிகள் மோதிக்கொள்ளும் மீன் சந்தையாக சில தமிழ் இணையதளங்கள் மாற்றமடைந்துவிட்டன பிரயோசனமற்ற விடயங்களுக்கு கூட ஒருவரையொருவர் சேறுபூசுகின்றனர் பின் அதற்கான மறுப்பறிக்கைகள் கட்டுரைகள் என அடுத்த சேறுபூசல் வரை இதுதொடர்கிறது அண்மையில் இப்தார் நிகழ்வொன்றை வைத்துக்கூட மாறி மாறி சண்டையிட்டுகொண்டனர்.

இந்நிலை தொடர்வது தமிழ் ஊடக வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்ல பாதாளத்துக்குள் இருந்த தமிழ் ஊடக வளர்ச்சிக்கு புதுதெம்பளித்த இணையதளங்கள் சிலரின் தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலுக்கமைய செயற்பட்டால் மீண்டும் பின்னோக்கியே பயணிக்கவேண்டியிருக்கும் என தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -