O/L: 5ஏ சித்திகளுக்கு மேல் பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட 644 மாணவர்கள் கௌரவிப்பு (Photos)


பா.திருஞானம்-

ல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நுவரெலியா மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட 644 மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கமும் வழங்கும் நிகழ்வு இன்று (25) கல்வி இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் எல்.அய்.சீ (LIC) காப்புறுதி நிறுவனத்தின் அனுசரணையுடன் நுவரெலியா மாவட்டத்தில் 2015 ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 5 ஏ சித்திகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கான இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  இன்று (25.06.2016) காலை 8.30 மணிமுதல் நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நடைபெற்றது

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டார். 

இவருடன் நுவரெலியா மாநகர சபையின் முதல்வர் மகிந்த தொடம்பே கமகே,எமது  எல்.அய்.சீ காப்புறுதி (டுஐஊ) நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஜே.சென்,பொது முகாமையாளர் அரவிந்தர் சிங் மற்றும் பாராளுமன்ற  மாகாண சபை உறுப்பினர்களும் கல்வி அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் மாணவர்களும் கலந்து கொள்கின்றனர்.

மாணவர்களை ஊக்குவிக்கின்ற அதேவேளை 91 பாடசாலை அதிபர்களுக்கும் விசேட விருதுகள் வழங்கப்பட்டன. அதே நேரத்தில் கல்வி வலயங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. 














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -