கிண்ணியா தள வைத்தியசாலையின் வைத்தியர் குவாட்டஸுக்கான புதிய 03 மாடிக்கட்டிடம்

ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
சுனாமியால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த கிண்ணியா தள வைத்தியசாலையின் வைத்தியர் குவாட்டஸுக்கான புதிய 03 மாடிக்கட்டிடத்தை 103 மில்லியன் செலவில் அமைக்கவுள்ளதாக இன்று 23 முன்னால் கிழக்கு மாகாண சபையின் தவிசாளரும்,மத்திய சுகாதார பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயீஸ் தெரிவித்தார்.

வைத்தியசாலை குவாட்டஸ் கட்டுமானப்பணியின் வேலைகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்த வேளையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
நீண்ட கால குறையாகவும்,தேவையாகவும் இருந்த வைத்தியர் குவாட்டஸ் இதன்மூலம் நிவர்த்திக்கப்படவுள்ளது.வைத்தியர்கள் தங்கியிருந்து கடமை புரியும் சூழல் இதன்மூலம் உருவாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எச்.எம்.சமீம்,திட்ட பொறியியலாளர்கள்,கிண்ணியா தள வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மற்றும் ஒப்பந்தகாரர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -