கிழக்கில் வைத்தியர் பற்றாக்குறை : 05 வருடத்திற்குள் தீர்த்துவைப்பேன் - பைசால் காசீம்

எம்.எம்.ஜபீர்-
நாட்டிலுள்ள வைத்தியசாலைகள் மத்திய, மாகாண வைத்தியசாலைகள் என பார்க்காமல் அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் ராஜிதசேனரத்தின கேட்டுக்கொண்டதற்கமைய மாகாண சபையின் கீழுள்ள மத்தியமுகாம் வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன்.

மத்தியமுகாம் வைத்தியசாலைக்கு நேற்று மாலை திடீர் விஜயம் மேற்கொண்ட சுகாதார துறை பிரதி அமைச்சர் எம்.சீ.பைசால் காசீம் இவ்வாறு தெரிவித்தார்.

மத்தியமுகாம் வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் டபிள்யூ.நுவானிடம் வைத்தியசாலையின் குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டதுடன், வைத்திசாலையின் விடுதிகள், செயலிழந்து காணப்படும் வைத்தியசாலை கட்டிடங்கள், யுத்தத்தினால் தூர்ந்து போயுள்ள வைத்தியர் மற்றும் தாதியர்கள் தங்குமிட விடுதிகள் என்பவற்றையும் நேரில் விஜயம் செய்த பார்வையிட்டார் .

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;

 எந்தவொரு அபிவிருத்தியானாலும் எதிர்கால திட்டங்களை கவனத்தில் கொண்டு முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக மத்திய அரசின் கீழுள்ள கட்டித் திணைக்களத்தின் தொழில்நுட்ப குழுவை அனுப்பி அவர்களை கொண்டு எதிர்காலத்திற்கான பாரிய திட்டத்தை தயார் செய்து தொடர்ந்து இவ்வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வோம். மகேப்பேற்றுவிடுதி, இரண்டு மாடிக் கட்டம், மின்பிறப்பாக்கி என்பவற்றை துரிதமாக தருவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளேன். 

ஆளனி பற்றக்குறையை பொறுத்தவரை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் தான் இதனை தீர்க்க வேண்டும். வைத்தியர்கள் பிரச்சினை குறைபாடுகள் காணப்படுகின்றன முழுமையான சுகாதார சேவையை வழங்குவதற்கு இன்னும் 3000 வைத்தியர்கள் தேவைப்பாடு காணப்படுகின்றது ஒரு வருடத்தில் 1000 வைத்தியர்கள் வெளியாகுகின்றனர். 

அதிலும் 250 மேற்பட்ட வைத்தியர்கள் தூர இடங்களுக்கு நியமிக்கப்பட்டால் வேலையை கைவிட்டு வெளிநாடுகள் போன்றவற்றிற்கு செல்கின்றனர். கிழக்கு மாகணத்தில் தான் அதிகமான வைத்தியர் பற்றாக்குறை நிலவுகின்றது. எதிர்வரும் 5 வருடங்களில் இப்பிரச்சினை தீர்ந்துவிடும் எனவும் தெரிவித்தார்.

இதன்போது முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபை உதவி தவிசாளர் ஏ.ஆனந்தன், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.தாஜப்தீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு அமைப்பாள் ஏ.சீ.நஸார், வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -