வாழைச்சேனையில் 160 போதை மாத்திரைகளுடன் வியாபாரி கைது...!

த.நவோஜ்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் முச்சக்கர வண்டியொன்றில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி போதை மாத்திரைகளை செவ்வாய்கிழமை மாலை கைப்பற்றியதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

செவ்வாய்கிழமை மாலை கல்முனைப் பிரதேசத்தில் இருந்து முச்சக்கரவண்டி ஒன்றின்; உதவியுடன் ஓட்டமாவடி பிரதேசத்திற்கு விற்பனைக்காக கொண்டு சென்றபோது பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவற்றினை கறுவாக்கேணி எனும் இடத்தில் வைத்து கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.

இதன்போது 160 போதை மாத்திரைகள் மீட்;கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அத்துடன் இதற்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

சந்தேக நபரை வியாழக்கிழமை வாழைச்சேனை மாவட்ட நீதீவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் ஹேரத்தின் தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் உதவியுடன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வாழைச்சேனை பகுதியில் அதிரித்து வரும் போதைப்பொருள் பாவனையைத் தடுத்து குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென்பதே எமது நோக்கமென்று வாழைச்சேனை பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் ஹேரத் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -