மீராவோடை ஸில்மி-
மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் காலத்திலேயே மு.கா ஆரம்பிக்கப்பட்டு எழுச்சி பெற்று கட்சி வளர்ச்சியடைந்தது. அதன்பின்னர் கல்குடாவிலே கடந்த பாராளுமன்ற தேர்தலிருந்து கட்சி அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது.
மீராவோடை அல்.ஹிதாயா வித்தியாலயத்தில் முதலமைச்சரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இப்தார் நிகழ்வில் மு.கா உயர்பீட உறுப்பினர் கணக்கறிஞ்சர் றியாழ் மேலும் அவர் தெரிவிக்கையில்,
"நான் பாராளுமன்ற தேர்தலில் களமிறக்கப்பட்டபோது கட்சி தொய்விழந்து , போராளிகள் சோர்விழந்து வேறு கட்சியை நாடிச்செல்லும் நிலையில் இருந்தனர்.ஆனால் எமது தூரநோக்கான சிந்தனையில் , மிக நுணுக்கமான காய்களை நகர்த்தி போராளிகளை ஒரேகுடையின் கீழ் கொண்டுவந்தோம். நான் அரசியலுக்கு நுழைந்து வெறும் 16 நாட்களில் 3000 க்கும் குறைவாக இருந்த கட்சியின் வாக்கு வங்கியை இறைவனின் உதவியால் 10,000 ஆக உயர்த்தி காட்டினோம். துரதிஷ்ட வசமாக தேர்தலில் தோற்க நேரிட்டாலும் தேர்தலின் பிற்பாடும் எமது மத்திய குழு மிக உயிர்ப்பான முறையில் இயங்குவதால் திட்டங்களை வகுத்து அபிவிருத்தி பணிகளை செய்து கட்சியை மென்மேலும் எழுச்சி பெறச்செய்துள்ளோம். " என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வை அலங்கரிக்க முதலமைசசர் ஹாபிஸ் நஸீர், கல்குடா மண்ணின் சொத்து கணக்கறிஞ்சர் ரியாழ் அவர்களும், ஓட்டமாவடி முன்னால் தவிசாளர் ஹமீட், கிழக்கு மாகாண வீடமைப்பு தலைவர் மீரா மூகைதீன், மு.மாகாண சபை உறுப்பினர் இஸ்மாயில், மட்டக்களப்பு மத்தி கல்வி பணிப்பாளர் சேகு அலி, பிரதேச சபை செயலாளர்கள் சாபி மற்றும் சஹாப்தீன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். அதிக அதிகமான மக்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.