2016ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு..!

சம்சுல் ஹுதா-
பொத்துவில் வெளிநாட்டு இஸ்லாமிய அமைப்பின் (PFIF) ஏற்பாட்டில் 2016ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு 2016.07.16ம் திகதி காலை 08 மணி முதல் ஆரம்பமாகவுள்ளது. 

கீழ்வரும் நாட்களில் குறித்த பாடங்களுக்கான இலவசக் கருத்தரங்கு நடைபெறவுள்ளன

2016.07.16 (சனிக்கிழமை) விவசாயம் மு.நௌஸாத் (ஆசிரியர்)
2016.07.17 (ஞாயிற்றுக்கிழமை) அரசியல் ஆ.டு.பிர்தௌஸ் (அதிபர்), ஆ.டீ.யு.றஹீம் (அதிபர்)
2016.07.18 (திங்கட்கிழமை) தமிழ் ஆ.ஐ.ஆ.அப்துல் கையூம் (ஆசிரியர்)
2016.07.19 (செவ்வாய்க்கிழமை) பொருளியல் யு.டு.ஆ.நாசர் (ஆசிரியர்)

குறித்த தினங்களில் காலை 08.00 மணிமுதல் மாலை 04.00 மணி வரை தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு நடாத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. 

மேலும் PFIF அமைப்பானது பொத்துவில் பிரதேசத்தில் பல சமூக மட்ட வேலைகளில் குறிப்பாக கடந்த வருடம் சாதாரண தர மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு, விதவைகள் ஏழைகளுக்கான வாழ்வாதார உதவிகள், பாடசாலை, பள்ளிவாயல்களுக்கான நன்கொடைகள் என பல சமூக செயற்பாடுகளில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கருத்தரங்கிற்கு Fast Lanka  ஊடக வலையமைப்பு ஊடக அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -