கிளிநொச்சி பகுதியில் 4 ஆர்பிஜி குண்டுகள் மீட்பு.!

பாறுக் ஷிஹான்-

கிளிநொச்சி சுண்டிக்குளம் பகுதியிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து 4 ஆர்பிஜி குண்டுகள்வியாழக்கிழமை பிற்பகல் குண்டு செயலிழக்கும் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் மற்றும் மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து குறித்த பகுதியில் குண்டு செயலிழக்கும் பிரிவினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, 4 ஆர்பிஜி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை செயலிழக்கச் செய்வதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தவுடன் குண்டுகள் செயலிழக்கப்படும் எனவும் குறித்த இடத்தில் பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது. குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் அருகில் பதுங்குகுழியொன்று உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -