ரகுமத்தும்மாவின் காணாமல் போன 46,500 ரூபாய் பணத்தைக் கண்டெடுத்து ஒப்படைத்த ரம்யலதா..!

எப்.முபாரக்-
சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பெண்ணொருவரின் 46, 500 ரூபாய் பணம் இருந்த கைப்பையை, பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கண்டெடுத்து, ஒப்படைத்துள்ளார் என சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநகர் பகுதியைச் சேர்ந்த ஹபிபுல்லாஹ் ரகுமத்தும்மா என்ற பெண்ணினுடைய 46, 500 ரூபாய் பணம் இருந்த கைப்பை, திங்கட்கிழமை (25) காலை 11. 00 மணியளவில் சேருநுவர பஸ் நிலையத்தில் வைத்துக் காணாமல் போயிருந்தது.

இதனைக் கண்டெடுத்த சேருநுவர பகுதியில் வசிக்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த, கே.டீ.கே.ரம்யலதா என்ற பெண் கண்டெடுத்துள்ளார்.

திருகோணமலை, சேருநுவர பஸ் நிலையத்தில் வைத்துக் காணாமல் போன, பணப்பையை குறித்த பெண், சேருநுவர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ. வசந்த குமாரவின் முன்னிலையில், உரிய பெண்ணிடம் ஒப்படைத்ததாக, சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -