முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பசில் ராஜபக்ச வளர்த்த இரண்டு கோல்டன் ரெட்ரிவேர்ஸ் நாய்களின் கூண்டைப் பராமரிப்பதற்கு ஐந்து கடற்படையினர் முழுநேரப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அவர் வளர்த்த உயர்வகை நாய்களைப் பராமரிக்க ஐந்து கடற்படையினருக்கு முழுநேரப் பணி வழங்கப்பட்டிருந்ததாக பாரிய மோசடிகள், ஆணைக்குழுவின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
சென்னையில்இருந்து இரண்டு லட்சம் ரூபாவுக்கு வாங்கப்பட்டஇந்த உயர்ரக கலப்பு இன நாய்கள் வளர்க்கப்பட்ட கூண்டு முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதிகளை கொண்டிருந்தது.
பசில் ராஜபக்சவுக்கு கடந்த ஆட்சியில் சட்ட ரீதியாக நியமிக்கப்பட்டிருந்த 7 மெய்ப்பாதுகாப்பு அதிகாரிகள் தவிர மேலதிகமாக, 148 இராணுவ மற்றும் கடற்படையினர் அடங்கிய பாதுகாப்பு அணி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
இவர்களில் பலர், நாய்க்கூண்டைப் பராமரிப்பது போன்ற தனிப்பட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். நாய்க்கூண்டைப் பராமரித்த கடற்படையினருக்கு கடற்படை வழங்கும் சம்பளத்துடன் மேலதிக கொடுப்பனவு 5000 ரூபாவும் வழங்கப்பட்டது.
பிரதம காவல்துறை ஆய்வாளர் ரஞ்சித் ராஜபக்சவும், உதவி ஆய்வாளர் ஹேரத்தும் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளதாக, மூத்த அரச சட்டவாளர் ஜனக பண்டார, ஆணைக்குழு விசாரரணைகளின் போது தெரிவித்தார்..