ஆயுர்வேத பட்டதாரிகள் 700 பேருக்கு வைத்திய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணம் - காங்கேசன்துறைப் பிரதேசத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இலங்கை ஆயர்வேத மத்திய நிலையத்தின் விற்பனைப் பிரிவை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
அத்துடன் ஆயுர்வேத மருந்துகள் உற்பத்திக்காக வெளிநாடுகளில் இருந்து மருந்து இறக்குமதி செய்யப்படுவது நிறுத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போது வெளிநாடுகளில் இருந்து ஆயுர்வேத மருத்துவ முறைகளுக்கான மூலிகைகள் இறக்குமதி செய்யப்படுவதாகவும், அதனை விநியோகிப்பதற்கு தேசிய உள்ளுர் உற்பத்தியை ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.