கிண்ணியன்-
நான் ஒரு பௌத்தனாக இருந்தாலும் என்னிடம் எந்த விதமான இன்,மத வேறுபாட்டு உணர்வுகளும் இடம் கிடையாது. எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வே என்னிடம் உள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெணான்டோ தெரிவித்தார்.
நேற்று (30) திருகோணமலை கலாசார மண்டபத்தில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தளம் நடாத்திய இப்த்தார் நிகழ்வில் பிரதம அதீதியாகக் கலந்து கொண்டு உரை ஆற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இஸ்லாம் ஐந்து தூண்களில் கட்டப்பட்டுள்ளது. அதில் நான்காவது கடமைதான் நோன்பு உற்சவமாகும். அல்லாஹ்வுக்கு பயந்து செய்கின்ற ஒரு முக்கியமான கடமை நோன்பு. மனிதனை இந்த நோன்பு தூய்மைப் படுத்துகிறது.ஏழைகளுடைய பசியை அறிவதற்கு உதவுகின்றது.மனிதனை கெட்ட செயல்களில் இருந்து தடுக்கின்றது. உடல், உள ரீதியாக மனிதன் ஆரோக்கியம் பெருகின்றான்.
இஸ்லாமியர்களுடைய ஐந்து கடமைகளும் அவர்களை நேரான பாதையில் கொண்டு செல்கின்றது.ஸகாத் கடமை மூலம் ஏழைகளை நேசிக்கிறார்கள். ஹஜ் கடமை மூலம் அல்லாஹ்வுக்கு தங்களை முழுமையாகத் தியாகம் செய்கிறார்கள்.
நோன்பின் மூலம் ஒரு மாதம் பெறுகின்ற இந்த நல்ல பழக்கங்களைவ வாழ் நாள் பூராவும் முஸ்லிம்கள் தொடருவார்களாக இருந்தால் இந்த நாட்டில் ஒரு முன்மாதிரியான சமூகமாக மாறுவர்கள் என்பதில் ஐயமில்லை.
கிழக்கு மாகாணம் இந்த நாட்டுக்கு முன்மாதிரியான மாகாணமாகத் திகழ்கின்றது. ஒரு இனத்தினுடைய கலாசார விழாவை ஏனைய மதத்தினர் சேர்ந்து கொண்டாடுவது பெருமையளிக்கின்றது. இதுவே நாட்டுக்கு தேவையான விடயமாகும். இனங்களுக்கிடையே நிலையான ஐக்கியமும் புரிந்துணர்வுமே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம் தேவையாகும். இந்த உண்மையை புரிந்து வைத்திருந்தாலே போதுமானது.