நான் BBS காரன் அல்ல - மூஸ்லிம்களுக்கு அநீதி இடம்பெற்றால் தட்டிக் கேட்பேன் : ஜனாதிபதிக்கு ஏசிய தேரர்

மட்­டக்­க­ளப்பு ஸ்ரீ மங்­க­ள­ரா­மய ­வி­கா­ரையின் விகா­ரா­தி­பதி அம்­பிட்­டிய சும­ண­ரத்­தின தேரர்நான் பொது பல சேனாக்­கா­ர­னு­மல்ல ராவ­ண­ப­லயக்­கா­ர­னு­மல்ல முஸ்­லிம்­க­ளுக்கு அநீதி இடம் பெற்றால் அதையும் தட்­டிக்­கேட்பேன் என மட்­டக்­க­ளப்பு ஸ்ரீ மங்­க­ள­ரா­மய பௌத்­த­வி­கா­ரையின் விகா­ரா­தி­பதி அம்­பிட்­டிய சும­ண­ரத்­தின தேரர் தெரி­வித்தார்.

கடந்த புதன்­கி­ழமை நடாத்­திய ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

மட்­டக்­க­ளப்பு ஸ்ரீ மங்­க­ள­ரா­மய பௌத்­த­வி­கா­ரையில் நடை­பெற்ற இந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் நான் பொது பல சேனாக்­கா­ர­னு­மல்ல ராவ­ண­ப­லயக்­கா­ர­னு­மல்ல. நான் ஜாதிக ஹெல­உ­று­ம­யு­மல்ல ஐக்­கிய தேசியக் கட்சி கார­னு­மல்ல. சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்­கா­ர­னு­மல்ல. முஸ்­லிம்­க­ளுக்கு அநீதி இடம் பெற்றால் அதையும் தட்­டிக்­கேட்பேன்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் தமிழ் மக்­க­ளுக்கோ முஸ்லிம் மக்­க­ளுக்கோ அதே போன்று சிங்­கள மக்­க­ளுக்கோ அநீதி இடம் பெறு­மானால் அதனை வீதிக்கு இறங்கித் தட்­டிக்­கேட்­பவன் நான்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மட்­டக்­க­ளப்பு பௌத்த விகா­ரையை புறக்­க­ணித்­துள்­ளமை கவ­லை­ய­டையச் செய்­கின்­றது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அவர்கள் இந்த நாட்டு ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்டு ஒன்­றரை வரு­டங்கள் கடந்­துள்ள நிலையில் அவர் மட்­டக்­க­ளப்­புக்கு மூன்று தட­வைகள் வருகை தந்தும் மட்­டக்­க­ளப்பு பௌத்த விகா­ரைக்கு வருகை தராமல் மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய பௌத்­த­வி­கா­ரையை புறக்­க­ணித்துச் சென்­றுள்ளார்.

இது பெரிதும் கவ­லை­ய­ளிப்­ப­துடன் கிழக்கு மாகாண பௌத்­தர்­க­ளையும் வேத­னை­ய­டையச் செய்­துள்ளது. மல்­வத்தை மற்றும் கண்டி அஸ்­கி­ரிய மற்றும் களனி போன்ற விகா­ரை­க­ளுக்கு அழைக்­கா­மலே செல்லும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஏன் அழைத்தும் மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய பௌத்­த­வி­கா­ரைக்கு வருகை தர­வில்லை.

கடந்த 2015ம் அண்டு ஒக்­டோபர் மாதம் 27ம் திகதி மட்­டக்­க­ளப்பு ஸ்ரீ மங்­க­ள­ரா­மய விகா­ரையில் ஜனா­தி­பதி சதஹம் யாத்ரா எனப்­படும் 9வது தர்ம உரை­யொன்று ஏற்­பாடு செய்­யப்­பட்டு அதில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கலந்து கொள்வார் என அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

அதற்­கான முழு ஏற்­பா­டு­களும் செய்­யப்­பட்டு நிகழ்வு நடை­பெற்றுக் கொண்­டி­ருந்த போது இறுதிக் கட்­டத்தில் அன்று நில­விய மழை­யுடன் கூடிய கால நிலை கார­ண­மாக ஜனா­தி­ப­தியின் விஜயம் இறுதி நேரத்தில் ரத்­தா­னது.

அந்த நிகழ்வில் இலங்கை அம­ர­புர மகா சங்க சபையின் பொதுச் செய­லாளர் ரோசி­ரியர் பிர­ம­ணா­வத்தை சீவலி அனு­நா­யக்க தேரர் உரை­யாற்­றினார். இந்த நிகழ்­விலும் ஜனா­தி­பதி கலந்து கொள்ள வில்லை. இதை விடவும் ஜனா­தி­பதி மூன்று தட­வைகள் மட்­டக்­க­ளப்­புக்கு வருகை தந்தார். ஆனால் அந்த விஜ­யங்களின் போது அவர் மட்­டக்­க­ளப்பு பௌத்த விகா­ரைக்கு வரவே இல்லை.

கடை­சி­யாக கடந்த 10.7.2016 ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று மட்­டக்­க­ளப்பு வருகை தந்து பல்­வேறு நிகழ்­வு­களில் கலந்து கொண்டார். அப்­போது மட்­டக்­க­ளப்பு வெபர் மைதான திறப்பு விழா வைப­வத்தில் வைத்து மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய பௌத்­த­வி­கா­ரைக்கு ஒரு நிமி­ட­மா­வது வந்து செல்­லு­மாறு அழைப்பு விடுத்தேன்.

தனக்கு நேர­மில்லை எனக் கூறி எனது அழைப்­பை புறக்­க­ணித்து மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய பௌத்­த­வி­கா­ரைக்கு வருகை தராமல் சென்றார். அவர் அந்த வைப­வத்தின் பின்னர் மட்­டக்­க­ளப்பு சிறைச்­சா­லைக்கு செல்­வ­தற்கும் நேர­மி­ருந்­தது. ஆனால் மட்­டக்­க­ளப்­பி­லுள்ள பௌத்த விகா­ரைக்கு செல்­வ­தற்­குத்தான் நேர­மி­ருக்க வில்லை.

ஜனா­தி­ப­தியின் இந்தப் புறக்­க­ணிப்பு கிழக்கு மாகாண பௌத்த மக்­களை ஏமாற்­ற­ம­டையச் செய்­துள்­ள­துடன் கவ­லை­ய­டை­யவும் செய்­துள்­ளது.

ஜனா­தி­பதி ஏறா­வூருக்கு ஆடைத்­தொ­ழிற்­சாலை திறக்கச் சென்றார். அப்­போது அங்­குள்ள பௌத்த விகா­ரைக்கும் செல்ல வில்லை.மட்­டக்­க­ளப்பு ஸ்ரீ மங்­க­ள­ரா­மய பௌத்­த­வி­கா­ரையில் கடந்த 22 வரு­டங்­க­ளாக நான் கட­மை­யாற்­று­கின்றேன். யுத்த காலத்தில் விடு­த­லைப்­பு­லி­களின் அச்­சு­றுத்­தல்கள் மற்றும் இயக்­கங்­களின் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு மத்­தியில் எனது உயிரை பணயம் வைத்து பாரிய அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு மத்­தியில் கட­மை­யாற்­றி­யுள்ளேன்.

யுத்­தத்தின் போது எனது கையில் பல இரா­ணுவ வீரர்­களின் உயிர்கள் பிரிந்­துள்­ளன. இவ்­வ­ளவு கடி­ன­மான காலத்தில் கட­மை­யாற்றி பல சவால்­க­ளுக்கு முகம் கொடுத்து ஐக்­கி­யத்தை நிலை­நாட்ட பாடு­பட்­டுள்ளேன்.

இன்று சிறப்­பாக இருக்கும் மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய பௌத்­த­வி­கா­ரைக்கு ஜனா­தி­பதி விஜயம் செய்­தி­ருக்க வேண்டும். ஆனால் அவர் விஜயம் செய்­யாமல் புறக்­க­ணித்தார். ஜனா­தி­ப­தியின் எந்தப்பங்களிப்புமில்லாமல் எமது விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அந்தக் கட்டிடத்தின் நினைவுக்கல்லில் ஜனாதிபதியின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

எனவே அவர் வருகை தராமல் புறக்கணித்ததால் அவரின் பெயர் அதில் தேவையில்லை என்பதாலேயே அந்த நினைவுக்கல்லையும் உடைத்தேன் இனிமேல் ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வருகை தருவதாயின் எமது மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய பௌத்தவிகாரைக்கு வருகை தந்துவிட்டே மற்ற இடங்களுக்கு செல்ல வேண்டும். அவர் ஒரு பௌத்தன் என்பதால் இந்த வேண்டுகோளை விடுக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்: விடிவெள்ளி 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -