அட்டாளைச்சேனை இபாதாவின் இப்தார் நிகழ்வில் அதாவுல்லா, உதுமான்...!

சலீம் றமீஸ்,எம்.ஜே.எம்.சஜீத்-

ட்டாளைச்சேனை அல்- இபாதா கலாசார மன்றத்தின் 5 வது வருட இப்தார் வைபவமும் , பரிசளிப்பு விழா மற்றும் பாராட்டு நிகழ்வும் 2016.07.03 ஆம் திகதி அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடியில் நடைபெற்றது.

அல்- இபாதா கலாசார மன்றத்தின் தலைவரும்,அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளருமான மௌலவி யு.எம்.நியாஸி (யுனுநு) தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், முன்னாள் உள்ளுராட்சி ,மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா ,கௌரவ அதிதியாக தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சருமான கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.எல்.எம்.ஹாசிம் மற்றும் உலமாக்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், உயரதிகாரிகள் , முக்கியஸ்தர்கள், கட்சிகளின் பிரமுகர்களும் கலந்து சறிப்பித்தனர்.

இந்த நிகழ்வின் போது இந்த வருட ரமழான் தினத்தில் ஹதீஸ் மஜ்லீஸ் (பயான்) நிகழ்வு போட்டி நிகழ்ச்சியில் வெற்றீட்டியவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு ,அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் புதியதாக தெரிவு செய்யப்பட்ட 23 அதிபர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் ஹதீஸ் மஜ்லீஸ் நடைபெற்ற பிரதேசத்தின் சிரமதான பணிகளில் பங்கு பற்றிய அல்-அர்ஹம் வித்தியாலயம், அறபா வித்தியாலய மாணவர்களுக்கு நற்சான்றிதழ்களும், பாடசாலைகளுக்கான நினைவு பரிசும் அதிபர்களிடம் வழங்கி வைக்கப்பட்டதுடன்,கலாசார உத்தியோகத்தர்களுக்கும், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.அலாவுத்தின் அவர்களுக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது. அல்-இபாதா கலாசார மன்றத்திற்காக பணியாற்றிய உறுப்பினர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

விஷேடமாக முன்னாள் அமைச்சரும்,தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா ,கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் , முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோருக்கு இபாதா மன்றத்தினால் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கபட்டனர்.

அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றங்கரை இரு ஓரங்களையும் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் வீதிகள் அமைக்கப்பட்டு சூரிய சக்தி மின் குமிழ்கள் பொறுத்தப்பட்டு அழகு படுத்தப்பட்டது யாவரும் அறிந்த விடயம் இதனை தொடர்ந்தும் பொதுமக்களுக்கு பிரயோசனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அல்- இபாதா கலாசார மன்றத்தினை உருவாக்கி அதனுடாக ஒவ்வொரு வருடமும் இந்த இடத்தில் ரமழான் மாதத்தில் வெளியூர், உள்ளுர் பிரபல உலமாக்கள் மூலமாக ஹதீஸ் மஜ்லீஸ் மார்க்க சொற்பொலிவு கடந்த 5 வருடங்களாக நடைபெற்று வருகின்றது.

இந்த ஆற்றங்கரையினை அழகுபடுத்தி இவ்வாரான ஹதீஸ் மஜ்லீஸ் மார்க்க சொற்பொழிவு ரமழான் காலங்களில் நடாத்துவதுடன், இந்த மன்றத்தின் ஊடாக சமூக பணியாற்றுவதற்கும் சந்தர்ப்பம் அமைவதற்கு அல்-இபாதா கலாசார மன்றத்தின் ஸ்தாபகரும், போசகருமான முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான தேசகீர்த்தி எம்.எஸ். உதுமாலெப்பை காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -