மன்னார்: வர்த்தகர்களுக்கும், நகர சபை அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் - இஸ்தளத்தில் றிப்கான் பதியுதீனின்

எஸ்.என்.றிஸ்லி-
ன்னார் நகர சபையினரால் வழங்கப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களுக்கான மீதிப்பணத்தை செலுத்தாத வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு மாநகர சபையினர் எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரியவருவதாவது,

மன்னார் நகர சபைக்கு அருகில் இயங்கி வந்த தினச்சந்தை வியாபார நிலையம் கடந்த 01-03-2012 அன்று திடீர் தீ விபத்தின் காரணமாக எரிந்து சாம்பளாகியது. இதனால் குறித்த சந்தையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த வர்த்தகர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் மன்னார் தனியார் பேருந்து தரிப்பிடத்திற்கும் மன்னார் சிறுவர் பூங்காவிற்கும் இடையில் நகர சபையினால் 27 கடைகள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டது.

அதில் 6 வர்த்தகர்கள் குறித்த கடையினை முழுத்தொகையினையும் செலுத்தி சொந்தமாக்கியுள்ளனர்.

எனினும் ஏனைய 21 வர்த்தக நிலைய உரிமையாளர்கள் 2 இலட்சம் ரூபாவினை செலுத்திய போதும் மிகுதி 3 இலட்சம் ரூபாய் பணத்தை செலுத்தாத நிலையில் அசமந்த போக்குடன் செயற்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மன்னார் நகர சபை அதிகாரிகள் இன்று காலை குறித்த சந்தை பகுதிக்குச் சென்று மிகுதி பணத்தை செலுத்தாத வர்த்தக நிலையங்களை மூட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் வர்த்தகர்களுக்கும், நகர சபை அதிகாரிகளுக்கும் இடையில் சற்று முறுகல் நிலை ஏற்பட்டது.

எனினும் குறித்த வர்த்தகர்கள் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான பதியுதீனின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மற்றும் மன்னார் நகர சபையின் அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இதன் போது மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் பிரிட்டோ சம்பவ இடத்திற்கு வந்து வர்த்தகர்களுடன் கலந்துரையாடியதோடு வடமகாண சபை உறுப்பினருடன் கலந்துரையாடினார்.

இந்த நிலையில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த வர்ததக நிலையங்களை மூடி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதோடு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் பிரிட்டோவிடம் வினவியபோது,

மன்னார் நகர சபைக்கு அருகில் இயங்கி வந்த மன்னார் தினச்சந்தை வியாபார நிலையம் கடந்த 01-03-2012 அன்று திடீர் தீ விபத்தின் காரணமாக எறிந்து சாம்பளாகியது.

இதனால் அவ்வர்ததக நிலையங்களில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த வர்த்தகர்கள் பல்வேறு அசௌகரிங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர். இந்த நிலையில் மன்னார் தனியார் பேருந்து தரிப்பிடத்திற்கும் மன்னார் சிறுவர் பூங்காவிற்கும் இடையில் நகர சபையினால் 27 கடைகள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டது.

இதன் போது இரண்டு வர்த்தக நிலையங்கள் 8 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வீதம் ஏலத்திற்கு விடப்பட்டது. இதனை வர்ததகர்கள் இருவர் பெற்றுக்கொண்டனர். மேலும் 4 வர்த்தக நிலையங்களை 5 இலட்சம் ரூபாய் வீதம் முழுத் தொகையும் செலுத்தப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்டது.

ஏனைய 21 வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டது. முழுத்தொகை 5 இலட்சமாக காணப்பட்ட போதும் குறித்த 21 வர்த்தகர்களும் 2 இலட்சம் ரூபாவினை வழங்கி ஒரு வருட தவணையில் மிகுதி 3 இலட்சம் ரூபாய் பணத்தை வழங்குவதாக ஒப்பந்தம் செய்த நிலையில் வர்த்தக நிலையங்கள் வழங்கப்பட்டது.

எனினும் நீண்ட காலமாகியும் பணத்தை வழங்க அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

இதனால் இன்று காலை வர்த்தக நிலையங்களுக்குச் சென்ற மன்னார் நகர சபையின் அதிகாரிகள் மிகுதிப் பணத்தை செலுத்தாத வர்த்தக நிலையங்களை மூடி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதனை வர்த்தகர்கள் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மாகாண சபை உறுப்பினர் வர்த்தகர்களுடன் கலந்துரையாடியதோடு, வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளருடன் தொலைபேசி ஊடாக பிரச்சினை குறித்து கலந்துரையாடினார்.

இவ்விடையம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுவதாக மாகாண சபை உறுப்பினர் உறுதி வழங்கியமைக்கு அமைவாக ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.

இவ் வர்த்தக நிலையங்கள் குறித்து வடமாகாண முதலமைச்சரினால் ஒப்பந்தத்திற்கு அமைவாக முழுத்தொகையினையும் செலுத்தாத வர்த்தகர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாகவும், உள்ளுராட்சி ஆணையாளரின் கடிதத்தின் பிரகாரமே நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக மன்னார் நகர சபையின் செயலாளர் தெரிவித்தார்.

மன்னார் நகரைச் சேர்ந்த 7 ஆயிரம் குடும்பங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட வரிப்பணம் மூலம் அமைக்கப்பட்ட கடைத்தொகுதியினை தனிப்பட்ட முறையில் எவருக்கும் வழங்கப்பட முடியாது.

எதிர் காலத்தில் மக்கள் நகர சபையிடம் கேல்வி எழுப்பும் சந்தர்ப்பம் ஏற்படும். முழுத்தொகையினை செலுத்திய ஏனைய வர்த்தகர்களுக்கும் நாம் பதில் சொல்லும் நிலை ஏற்படும்.

இதேவேளை 21 வர்ததக நிலையங்களில் குறிப்பிட்ட சிலரே தொடர்ந்தும் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏனையவர்கள் அதி கூடிய வாடகைக்கு வர்த்தக நிலையங்களை பிறிதொரு நபர்களிடம் கொடுத்து விட்டு உள் நாட்டிலும், வெளி நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

வர்ததக நிலையங்கள் மன்னார் நகர சபையினால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கு எதிரான நடவடிக்கை எனவும், குறித்த நடவடிக்கைகளுக்கு எதிராக வெகு விரைவாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் பிரிட்டோ மேலும் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -