கிழக்கில் பிரமாண்டமான தனியார் வைத்தியசாலை - கிழக்கு முதல்வர் மலேசிய முதல்வருடன் பேச்சு

கிழக்கு மாகாணத்தில் சகல வசதிகளையும் கொண்டதான பிரமாண்டமான வைத்தியசாலை ஒன்றினை அமைக்க கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் விடுத்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட மலேசிய ஜொஹோர் மாணில முதலமைச்சரின் தூதுக் குழு மலேசிய தொழிற்துறை அபிவிருத்தி சிரேஷ்ட பிரதித் தலைவர் அமினுடீன் பின் தவம் தலைமையில் இன்று 26.07.2016 காலை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தினர்.

கிழக்கு மாகாணத்தில் பாரிய சகல வசதிகளையும் ஒருமித்ததான வைத்தியசாலை ஒன்றினை அமைத்து தனியார் துறையில் பட்டங்களை முடித்த பலருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குவதுடன் சகல நோய்களுக்குமான ஒரு சிறந்த வைத்தியசாலையை கிழக்கில் அமைப்பதால் கிழக்கில் பல அசெளகரியங்களுடன் வெளியிடங்களுக்குச் செல்வதனைத் தடுத்து காலடியிலேயே சிறந்த வைத்திய சேவையினை பெறும் வாய்ப்பினையும் கிழக்கு மக்களுக்கு வழங்கலாம் என்ற முதலமைச்சரின் நல்லம் விரைவில் வெற்றியடைய வேண்டும் என்று மலேசிய ஜொகோன் மாணில தொழிற்துறை அபிவிருத்தி சிரேஷ்ட பிரதித் தலைவர் அமினுடீன் பின் தவம் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பு கிழக்கு முதலமைச்சரின் கொழும்பு காரியாலயத்தில் இன்று காலை 11 மணிக்கு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -