மூதூரில் ஜனாதிபதி ஆற்றிய உரை!...

எப்.முபாரக்

 மீன்பிடி,உல்லாசத்துறை,பொருளாதாரத்துறை என இன்னும் பல துறைகளில் இப்பிரதேசம் நாட்டின் பொருளாதாரத்திக்கு பாரிய பங்களிப்புச் செய்கின்றன அதேவேளை இப்பிரதேசத்தின் பௌதீக வளங்களை மேம்படுத்த பாரிய செயற்றிட்டங்களை உருவாக்கியுள்ளோம் என இன்று மாலை (29) இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான,கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு 34 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட மூதூர் நீதிமன்ற கட்டடத்தொகுதியை திறந்து வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் உரையாற்றும் போது நல்ல மனிதர்கள் உருவாக வேண்டுமென்றால் இந்த நாட்டில் சட்டத்துறை சிறப்பாக செயற்பட வேண்டும் ஆகவே நேர்மையான முறையில் நீதிச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் நீதித்துறையில் தேங்கிக் கொண்டிருக்கும் வழக்குகளை தீர்த்துத் தருவதற்கான விதப்புரையை எனக்கு பெற்றுத்தர வேண்டுமென தனதுரையில் கேட்டுக் கொண'டார்.

பொதுமக்களின் நலன்கருதி இத்துறையை மேம்படுத்தவும், அபிவிருத்தி செய்யவும் உச்ச கட்ட நிதியியை செலவிட அரசாங்கம் தயாராக இருக்கின்றது.ஒவ்வொருவரும் தமது பொறுப்புக்களையும்,கடமைகளையும் மனசாட்சிக்கு விரோதமில்லாத வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி தனது உரையில் மேலும் குறிப்பிட்டார்.

மூதூரின் வரலாறு பற்றி ரசனையுடன் சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டிருந்தார் மூதூரின் வரலாறானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது அதனை நான் வரலாற்றை படிக்கும் போது தெரிந்து கொண்டுள்ளேன் என குறிப்பிட்ட ஜனாதிபதி ஐ.நா.சபையின் மனித உரிமை அமைப்பினால் அடிக்கடி பேசப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் பற்றி நாம் அறிந்திருக்கின்றோம்.இந்த நாட்டின் மனித விழுமியங்களை பாதுகாப்பதற்காக அரசு அதன் முனைப்பான செயற்பாடுகளை காட்டியும் செயற்படுத்தியும் வருகின்றன.

மனித உரிமை ஆணையாளர் என்னோடு பேசும் போது இந்நாட்டின் சட்டத்துறையின் சுயாதீனத் தண்மை பற்றி கடந்த நாட்களில் அடிக்கடி பேசியுள்ளார்.அதேவேளை மனித உரிமை ஆணையாளர் எமக்கு அழுத்தம் கொடுக்கவோ,எம்மீது அதிகாரத்தை பயன்படுத்தவோ இல்லை இந்நாட்டின் மக்களின் நலனுக்காகவும,; சட்டத்துறையினை மேம்படுத்துவதற்குமாகவே ஆணையாளர் இச்சட்டத்துறையின் சுயாதீனம் பற்றி பேசியுள்ளார் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

இந்நாட்டின் அரசியலமைப்பும்,சட்டத்துறையும் சர்வதேச ரீதியாக எமக்கு வரவேற்பை பெற்றுத்தரக்கூடியதாக இருக்க வேண்டும் இது தனிப்பட்ட கட்சிக்கான வேலைத்திட்டமில்லை நாட்டின் புலகாங்கிதத்தை எடுத்துகாட்டுகின்ற விடயமாக இருக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நீதித்துறையில் அமர்ந்துள்ளவர்கள் அவரவர் பணியினை திறன்பட செய்யாதுவிடின் நீதித்துறையில் பல விபரீதங்களும்,மக்களுக்கான நீதியும் சரியாக கிடைக்காது போய்விடும் என குறிப்பிட்ட அவர் நீதித்துறையை திறன்பட நடைமுறைப்படுத்த இந்நாட்டின் தலைவர் என்றவகையில் என்னால் உச்ச பங்களிப்பை நல்க முடியும் என தனதுரையில் மேலும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும்,நீர்வழங்கள் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சருமான றவுப் ஹக்கீம்,கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாண்டோ மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட்,உயர்நீதிமன்ற நீதியரசர் சிறி பவன் உட்பட திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக்,அப்துல்லா மகருப், இம்றான் மகருப், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எச்.எம்.நசீர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி மாகாண சபை உறுப்பினர்கள் சட்டத்தரணிகள்,பல அரச நிறுவனங்களின் தலைவர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -