இம்போட் மிரர் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அட்டாளைச்சேனை கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன் எழுதிய ‘தொப்புள் கொடியும் தலைப்பாகையும்’ கவிதை நூல் அறிமுக விழா எதிர்வரும் 06(சனிக்கிழமை) மாலை 04 மணிக்கு அல்ஹாஜ் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா தலைமையில் இடம்பெறும் என ஆசுகவி அன்புடீன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
இம்போட் மிரர் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர் அவர்களுடன் கெளரவ அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும் , தற்போதைய உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, நடுநாயக அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.அஸீஸ் அவர்களுடன் அரசியல் பிரமுகர்கள், இலக்கியவாதிகள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்வின் போது இம்போட் மிரரின் ஆரம்பகால உறுப்பினர்களை கெளரவிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.