​துருக்கியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயன்ற சதித் திட்டம் முறியடிப்பு!..

துருக்கியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயன்ற சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ராணுவத்தில் உள்ள குலேன் சிறுபான்மையின ஆதரவாளர்கள் மீது அதிபர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். 

துருக்கியில் பினாலி எல்ட்ரீம் தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில், தலைநகர் அங்காராவில் உள்ள அரசு மாளிகையை ராணுவம் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாயின. நாடாளுமன்றம் மீது குண்டுகள் வீசப்பட்டதோடு, ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதில் 17 போலீசார் உயிரிழந்தனர். 

இதனிடையே துருக்கியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயன்ற சதித் திட்டம் முறியடிக்கப்பட்டதாக அதிபர் எர்டோன் அறிவித்துள்ளார். ஆட்சியை கைப்பற்ற முயன்றதாக 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ராணுவத்தில் உள்ள குலேன் சிறுபான்மையின ஆதரவாளர்களே இத்தாக்குதலை நடத்தியதாக துருக்கி அதிபர் எர்டோகன் புகார் தெரிவித்துள்ளார். 

குழப்பம் விளைவிக்க முயற்சித்தவர்கள் கைப்பற்றிய ராணுவ விமானங்களை சுட்டுவீழ்த்தவும் அதிபர் உத்தரவிட்டுள்ளார். ராணுவத்தை சீரமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் அதிபர் சூசகமாக தெரிவித்துள்ளார். 
news7
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -