ஏறாவூர் வாவிக்கரை சிறுவர் பூங்காவில் வித்தியாசமான முறையில்
இயற்கையின் அழகிற்கு மத்தியில் நேற்று 01.07.2016 வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இஃப்தார் நிகழ்வானது ஏறாவூர் பிரதேசத்தில் மட்டுமல்லாது,
மாவட்டத்திலே புதுமையான இஃப்தார் நிகழ்வாக காணப்பட்டமையினை வருகை தந்திருந்த நோன்பாளிகளின் கருத்துக்களிலிருந்து உணரக்கூடியதாக இருந்தது.
கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் றிஸ்வியின் மார்க்கச்சொற்பொழிவுடன் ஆரம்பமான குறித்த இஃப்தார் நிகழ்வில், முக்கிய விடயமாக பூங்காவிற்கான விளையாட்டு இயந்திரம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டதுடன்,
கிழக்கு மாகாண சபையிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனேகமான மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டமை முக்கிய விடயமாகும். அத்தோடு, கல்குடா பிரதேசத்திலிருந்து அதிகளவான நோன்பாளிகளும் கலந்து கொண்டதோடு, உயரதிகாரிகள், பொது மக்கள் எனப்பெரும்பாலானோர் பங்குபற்றியமையும் குறிப்பிடதக்க விடயமாகும். குறித்த இஃப்தார் நிகழ்வில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகாண சபை உறுப்பினர் கலையரசன் உரையாற்றுகையில்,
இஸ்லாமிய மதத்தின் முக்கியமாகக் கருத்தப்படும் அல்குர்ஆனை மனனம் செய்து ஹாபிஸ் எனும் சிறப்புப்பட்டத்தினை கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தன்னுடன் வைத்திருப்பதானது, சகல மக்களுக்கும் பெருமை சேர்க்கின்ற விடயமாகும். அத்தோடு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜதுறை கூறியதைப்போன்று, முஸ்லிம் சமூகமும் தமிழ் சமூகமும் பிட்டும் தேங்காய்ப்பூவும் போன்று வாழ வேண்டுமென்றால், அரசியல் ரீதியாகப் போராட வேண்டிய தேவை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எமக்குள் கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட கசப்புணர்வுகள் நீக்கப்பட வேண்டுமென்றால், அரசியல் தலைவர்கள் கட்டாயம் கைகோர்க்க வேண்டும். அரசியல் ரீதியாக மக்களை நல்வழிப்படுத்தி,
விழிப்புணர்ச்சியூட்டி எமது பிரதேசத்தினை ஒற்றுமையுடன் கட்டிக்காக்க முற்பட்ட வேண்டும். இதை ஏன் இங்கு முக்கியமாகக்கூறுகின்றேன் என்றால், கடந்த சில வாரங்களுக்கு முன்பு எமது முதமைச்சருக்கு கடற்படை அதிகாரிக்கும் உரசல் ஏற்பட்ட பொழுது, இந்நாட்டிலுள்ள பேரினவாதிகளும், பொது பலசேன போன்ற அமைப்புக்களும் பெரிதாகத் தூக்கிப்பிடித்தார்கள். எமது முதலமைச்சர் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காகவே அவ்வாறு பெரும்பான்மைச் சமூகத்திலுள்ள பேரினவாதிகள் முதலமைச்சருக்கெதிராக இனத்துவேச முறையிலான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டார்கள். ஆகவே, எமது பிரதேசத்தினை எதிர்காலத்தில் நாங்கள் எங்களது ஆளுமைக்குள்ளும், சுயாட்சிகுள்ளும் வைத்திருக்க வேண்டுமானால், இரண்டு சமூகமும் ஒற்றுமையுடன் மக்களை விழிப்படையச் செய்ய வேண்டிய விடயங்களை முன்னெடுக்க வேண்டும். அதனோடு சேர்த்து இன, மத, மொழி, வேறுபாட்டிற்கப்பால் நின்று செயற்பட்டு வரும் எமது முதலமைச்சரினுடைய அபிவிருத்து முன்னெடுப்புக்களுக்கும் ஏனைய திட்டங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன் எனத்தெரிவித்தார்.
இஃப்தார் நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், இன்றைய கால கட்டத்தில் அரசியல் தலைமைகள் அனைத்தும் இணைந்து செயலாற்றி வருகின்ற நிலையில், அதனை எவரும் கொச்சைப்படுத்தவோ அல்லது கேள்விக்குட்படுத்தவோ அல்லது அதனை இலகுவான விடயமென எடை போட்டு விடவோ முடியாது. பாரிய கேள்விகள் எங்களுடைய உள்ளங்களிலிருக்கின்றது என்பதனை உணர்ந்து கொண்டு குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும், ஐக்கிய தேசியக் கட்சியும் இந்த கிழக்கு மாகாண சபையினை எற்படுத்தியுள்ளோம். மாகாணத்திலே இப்பொழுதிருக்கின்ற ஆட்சியானது தெளிவானதொரு நல்லாட்சியாக இருக்கின்ற அதே நேரத்தில், மாகாணத்திலே இருக்கின்ற ஒவ்வொருவரும் சகோதரர்களைப் போன்று நினைத்துச் செயற்படுகின்றவர்களாக இருக்க வேண்டுமென்ற மனப்பாங்கினை உருவாக்கி வருகின்றோம் என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றோம் எனத்தெரிவித்தார்