துருக்கி ஜனாதிபதிக்கு கிழக்கு முதல்வர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அனுப்பிய கடிதம்

ராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டு துருக்கியில் மீண்டும் ஜனனாயகத்தை நிலை நாட்டியுள்ள துருக்கிய ஜனாதிபதி  அர்தூகான் மற்றும் அந்நாட்டு ஆட்சியாளர்களையும் அதற்கு ஒத்துழைப்பு நல்கிய பொதுமக்களையும் இலங்கையின் கிழக்கு மகாண முதலைமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பாராட்டியுள்ளார்.

துருக்கி தூதரகத்தின் ஊடாக துருக்கிய ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இந்த பாராட்டைத் தெரிவித்துள்ளதுடன் துருக்கிய மக்களின் வெற்றி இலங்கை வாழ் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

துருக்கிக்கும் இலங்கைக்குமிடையிலே நீண்டகால நெருக்கமான உறவுகள் உண்டு. இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு துருக்கி ஆற்றிவரும் பங்களிபுக்கள் ஏராளமானது. அந்தவகையில் இலங்கையில்  முஸ்லிம்கள் வாழும் பெருமாபாலான பிரதேசங்களில் துருக்கி பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமையை நான் நன்றியுடணர்வுடன் நினைவு கூருகின்றேன்.

முன்னொருகாலத்திலே ஐரோப்பாவின் நோயாளியென உலக நாடுகளால் கேலி செய்யப்பட்ட துருக்கி நாடு இன்று பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்து உலகின் பல நாடுகளுக்கு உதவி செய்தமை அந்த நாட்டின் வளர்ச்சியையே எடுத்துக் காட்டுகிறது.
துருக்கிய ஆட்சியாளர்கள் மேற்கொண்ட பொருளாதாரத்திட்டங்களே இந்த வெற்றிக்கு பிரதான காரணமாகும்.

இதனைச் சகிக்க முடியாத மேலைத்தேச சக்திகள் துருக்கியில் குளப்பங்களை உருவாக்கி ஆட்சியைக் கவிழ்ப்பதன் மூலம் தமது கனவை நிறைவேற்ற முடியுமென நினைக்கின்றனர். அந்தவகையிலேயே இந்த சதிப்புரட்சியின் பின்னணியை நாம் நோக்குகின்றோம்.

துருக்கிய இராணுவம் மேற்கொண்ட இந்த சதி முயற்சியை முறியடிப்பதற்கு தாங்கள் மிகவும் திரண்படச் செயற்பட்டு புரட்சியாளர்களுக்கு நல்ல பாடம் கற்றுக்கொடுத்துள்ளீர்கள். இஸ்லாமிய நாடுகளில் பிரச்சனைகளை உருவாக்கி ஆட்சிகளைக் கவிழ்த்து தமது எண்ணங்களை நிறைவேற்ற முடியுமென்ற இஸ்லாமிய விரோத சக்திகளுக்கு தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கை படிப்பினையாகவும் முன்னுதாரணமாகவும் இருக்குமென நாங்கள் நம்புகிறோம்.  என தனது கடிதத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -