மத்திய வங்கி ஆளுநர் பதவி நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நாடு திரும்பியதும் புதியவர்..!

மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கு இதுவரை எவரும் நியமிக்கப்படாமல் இன்னும் வெற்றிடமாகவே உள்ளது.  கடந்த 29ம் திகதி நள்ளிரவுடன் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனின் பதவிக்காலம் நிறைவுக்கு வந்துள்ளது. 

கோப் குழு மேற்கொள்ளும் தன் மீதான விசாரணைகள் நிறைவு பெறும் வரையில், தான் பதவி நீடிப்பை எதிர்பார்க்கவில்லை என்று முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் கூறியிருந்தார். 

இந்நிலையில் எதிர்வரும் சில மணித்தியாலங்களில் மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கு புதிய ஒருவர் நியமிக்கப்படுவார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 29ம் திகதி கூறியிருந்தார்.  எவ்வாறாயினும், நிதி நிர்வாக சட்டத்தின் படி விரைவில் மத்திய வங்கி ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.. 

அத்துடன், நிதிச் சபை சட்டத்தின் படி நிதியமைச்சரின் பரிந்துரைப்படியே மத்திய வங்கி ஆளுநரை நியமிக்க வேண்டும் என்பதால், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நாடு திரும்பிய பின்னர் புதிய மத்திய வங்கி ஆளுநர் நியமிக்கப்படுவார் என்று அரசியல் தகவல்கள் மூலம் அத தெரணவிற்கு அறியக் கிடைத்துள்ளது. 

தற்சமயம் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ளதாகவும், அவர் எதிர்வரும் 04ம் திகதி மீண்டும் நாடு திரும்புவார் என்றும் அவருடைய பாராளுமன்ற செயலாளர் அத தெரணவிற்கு கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -