மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பாதயாத்திரை சற்றுமுன் ஆரம்பம்..!

ரசுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பாதயாத்திரை சற்றுமுன்னர் பேராதெனியவில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.  இந்நிலையில் குறித்த பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டுவருவதால் பிலிமத்தலாவை பகுதியில் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கூட்டு எதிர்க் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “மக்கள் போராட்டம்” எனும் தொனிப் பொருளிலான பாதயாத்திரை சர்வமத நிகழ்வுகளில் பின்னர் தற்போழுது ஆரம்பமாகியுள்ளது.

இந்த நடைபவனி கண்டி தலதா மாளிகையின் முன்னால் ஆரம்பமாக இருந்த போதிலும் அதற்கு நேற்று நீதிமன்றம் தடை விதித்திருந்தமையினால், பேராதெனிய பாலத்துக்கு அருகில் இருந்து ஆரம்பமாகியது.  இன்று இந்த பாதயாத்திரை கண்டியில் ஆரம்பமாகி மாவனல்லை வரை இடம்பெறவுள்ளதாகவும், மீண்டும் நாளை மாவனல்லையிலிருந்து நெலுந்தெனிய வரை பயணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30ஆம் திகதி நெலுந்தெனியவிலிருந்து நிட்டம்புவ வரையிலும், 31ஆம் திகதி நிட்டம்புவயிலிருந்து கிரிபத்கொட நகர் வரையிலும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 01ஆம் திகதி கிரிபத்கொட நகரிலிருந்து கொழும்பு வரை பாதயாத்திரை செல்லவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது. அதேவேளை அன்றைய தினம் கொழும்பில் மக்கள் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -