சுஐப் எம் காசிம்-
கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, தெகிவளை, கல்கிஸ்ஸை மாநகரசபைக்குட்பட்ட பிரதேசங்களிலும் பெலவத்தை, அம்பத்தலையிலும் இன்று மாலை 6 மணி தொடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ள நீர்வெட்டை உடன் இரத்துச்செய்து மக்களுக்கு சீராக நீரை வழங்குவதற்கு அவசர நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமரை தொலைபேசியில் தொடர்புகொண்ட அமைச்சர் ரிஷாட்,
இந்த நீர்வெட்டினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் குறிப்பாக நாளை ஈத் பெருநாளை கொண்டாடும் முஸ்லிம்களுக்கு இந்த நீர்வெட்டு பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்தியிருப்பதாகவும் சுட்டிக்காடியுள்ளார்.
புனித தினங்களில் இவ்வாறான நடவடிக்கை மனிதாபிமானத்துக்கும் தர்மத்துக்கும் ஏற்புடையதல்ல எனவும் தெரிவித்தார். பிரதமர் இந்த விடயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள் விடுத்தார்.
நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சும், அமைச்சின் உயர் அதிகாரிகளும் மக்களின் கஷ்டங்களை அறிந்து செயற்படவேண்டுமெனவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்துள்ளார்.