அரசாங்கத்தினால் வற் வரி சீர்திருத்தம் தொடர்பில் தெளிவான தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை அது தொடர்பில் நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சர்வதேச கூட்டுறவு தினம் இன்று (02) கொழும்பில் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
இதேவேளை, இன்று பஸ்யாலை நகரில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல,
தற்பொழுது எழுந்துள்ள வற் வரி தொடர்பிலான பிரச்சினைக்கு எதிர்வரும் 04 ஆம் திகதி தீர்வு கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.