அதாஉல்லா அஹமட் சகி அரசியலுக்கு வந்தது இதற்காகத்தான் - அஸ்மி ஏ கபூர்

ரு முறை தலைவருடைய இல்லத்தில் இடம்பெற்ற மாநகர சபை உறுப்பினர்களுடனான கூட்டத்தில் அக்கரைப்பற்று மேயர் தலைவரிடம் என்னை குறிப்பிட்டு இவர் எதிர்கட்சி உறுப்பினர் போல் செயற்படுகிறார் என்றார். அது பதவி தொடர்பான பிரச்சினையோ வேறு அதிகார போட்டியோ கிடையாது.  பல முறை என்னால் சபை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் என்னுடைய கருத்தை சொல்லுகின்ற போது ஏற்படுகின்ற விடயங்களிடையிலான மோதல்களாகும். ஆனால் ஒரு போதும் மறைமுகமாக செயற்பட்டது கிடையாது.

அக்கரைப்பற்று முதல்வராக அஹமட் சகி இருந்த காலம்தான் தாம் இரண்டு தொகுதிகளாக பிரிந்து கிடந்த எமதூர் மக்களின் மனங்களின் ஒருமித்து ஓர் ஊராக உணர்த்திய காலம். கடந்த பிரதேச சபை காலத்தில் பல்வேறுபட்ட குறிச்சிவாதங்கள் தலைவிரித்தாடி இறுதியில் அக்கரைப்பற்று பட்டினப்பள்ளியை மறுத்து ஆர்ப்பாட்டம் நடத்துகிற அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது.

இவ்வாறான ஊரின் பொதுத்தண்மையை பேணவே சகி வலிந்து அரசியலுக்கு அழைத்து வரப்பட்டார்

இன்று ஊரின் இரு பகுதிகளிலும் நடந்திருக்கும் சமனான அபிவிருத்தி அதற்க்கு மிகச் சிறந்த சான்றுகளாகும். சபை முடிகின்ற காலத்தில் சபையில் சுமார் 14 மில்லியன் முதல்வரால் சேமிப்பில் வைத்து, போடப்பட்டிருக்கின்ற வீதிகள் எனைய அபிவிருத்தியில் ஏதும் திருத்தங்கள் ஏற்பட்டாலும் செய்வதற்காகவே சேமிக்கப்பட்டிருக்கிறது.

அக்கரைப்பற்று முதல்வர் என்கின்ற பாத்திரத்தை அகமட் சகி நேர்த்தியாக செய்திருந்தார். அதில் நெளிவு சுழிவுகள் இருக்கவில்லை தலைவருடைய கண்கானிப்பு முழுமையாக இருந்தது. பதவிகள் தொடர்பான குறிவைத்தல் பிழைத்து போனதே தவிர இங்கு சதிகள் ஏதும் நிகழவில்லை.

காலத்தின் தேவை எதுவோ அவற்றை இறைவன் முடிவு செய்வான் இங்கு சூழ்ச்சிகளால் தந்திரத்தால் எதையும் சாதிக்க முடியாது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -