உயர்தரப் பரிட்சையில் குற்றச்செயல்களைத் தடுக்க புதிய சட்டம்..!

எப்.முபாரக்-
யர்தரப்பரீட்சையின் போது இடம்பெறக்கூடிய குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் புதிய சட்டத்திட்டங்களை பரீட்சைகள் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கமைய சமூக தொடர்பாடல் வசதிகள் மற்றும் ஸ்மார்ட் வகை கைக்கடிகாரங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குற்றசெயல்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தபடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஸ்மார்ட் வகை தொடர்பாடல் வசதிகளை பயன்படுத்தும் பரீட்சாத்திகளுக்கு 5 வருடங்கள் பரீட்சை எழுத தடை விதிக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் டப்லியூ.எம்.என்.ஜே புஸ்பகுமார அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உயர்தரப்பரீட்சை நாடு பூராகவும் 2 ஆயிரத்து 204 பரீட்சை நிலையங்களில் நடைப்பெறவுள்ளதாகவும், இந்த பரீட்சையில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 991 உள்வாரியான பரீட்சாத்திகளும் 74 ஆயிரத்து 614 வெளிவாரியான பரீட்சாத்திகளும் தோற்றவுள்ளனர்.

உயர்தரப்பரீட்சைகள் ஒகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், இந்த காலப்பகுதியில் உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை நடத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -