தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் வாரம் 13 ஆம் திகதி அளவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிஸா பிஸ்வாலுடன், தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்க செயலாளர் மன்பிரட் சிங்கும் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்வரும் 13 ஆம் திகதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிஸ்வால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட பலரரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஸ)