தென் மாகாண சபை அமைச்சராக ஹேவா வெல்லாலகே குணசேன நியமனம்..!

தென் மாகாண கடற்றொழில், கால்நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி, சுற்றாடல் அலுவல்கள், கிராமிய கைத்தொழில், மின்சக்தி மற்றும் கிராமிய தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சராக தென் மாகாண சபை உறுப்பினர் ஹேவா வெல்லாலகே குணசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதம் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் முன்னிலையில் தென் மாகாண சபையின் ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் த சில்வா அவர்களும் இதில் கலந்துகொண்டார்.

குறித்த அமைச்சு பதவியில் ஏற்கனவே இருந்த டி.வி. உபுல் அந்த பதவியில் இருந்து ஜனாதிபதியால் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -