கூட்டு எதிர்க்கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு...!

கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிய வந்துள்ளது. 

நாளை (25) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெற உள்ளது. 

இதற்காக கூட்டு எதிர்க்கட்சியினருக்கு ஜனாதிபதி செயலகத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் ஜொன்ஸ்டன் பெர்ணாந்தோ ஆகியோருக்கு இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், நாமல் ராஜபக்‌ஷ மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலருக்கு அழைப்பிதழ் இதுவரை கிடைக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. 

கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நாளை நடைபெற உள்ள சந்திப்பில், அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினரால் மேற்கொள்ளப்படுகின்ற நடைபவணி தொடர்பிலும் பேசப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -