மூதூரில் தேன் எடுக்கச் சென்றவர் கரடி தாக்கி வைத்தியசாலையில்...!

எப்.முபாரக்-
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாவலி கங்கை காட்டுப்பகுதிக்கு தேன் எடுக்கச் சென்ற நபர், கரடி தாக்குதலுக்குள்ளான நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தோப்பூர் பட்டாளி புரத்தைச் சேர்ந்த சி. இராசரத்தினம் (வயது 45) என்ற நபரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பட்டாளி புரத்தைச் சேர்ந்த ஐந்து பேர், நேற்று வெள்ளிக்கிழமை (01), மஹாவலி கங்கை பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்கு தேன் எடுப்பதற்காகச் சென்றுள்ளனர். இதன்போது, அங்கிருந்த குறித்த நபரை, திடீரென்று வந்து பாய்ந்த கரடி தாக்கியுள்ளது.

எனினும் ஒருவாராக கரடியிடமிருந்து குறித்த நபரை காப்பாற்றிய மற்றையவர்கள் அவரை தோப்பூர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -