கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய பொறியியலாளர் சிப்லி பாறுக்..!

M.T. ஹைதர் அலி-
ல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் மட்டு மாவட்டத்தின், கல்குடா வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட மட்/ககு/அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு 2016.05.05ஆந்திகதி (வியாழக்கிழமை) விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

இவ்விஜயத்தின்போது பாடசாலையின் அதிபர் ஆர். ரவிச்சந்திரன் அவர்கள் பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, தளபாட வசதிகள் மற்றும் நீர் வசதி என்பன மிகவும் குறைபாடாகவே இருந்து வருவதோடு, நீர்ப் பிரச்சினையை எடுத்துக்கொண்டால் மலசல கூடத்திற்கு ஆசிரியர்களோ மாணவர்களோ தங்களது தேவைப்பாடுகளை கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலைமையில் இப்பாடசாலையின் மலசலகூடம் காணப்படுவதாக மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக்கிடம் தெரிவித்தார்.

இவ்வனைத்தையும் கேல்வியுற்ற மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் இப்பாடசாலையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து தர தன்னுடைய சொந்த நிதியிலிருந்து தண்ணீர் தாங்கி, நீர் இறைக்கும் பம் (மோட்டர்), நீர் வினியோகத்தை பெறுவதற்கான குழாய் வசதி மற்றும் பாடசாலை அதிபரின் காரியாலயத்திற்கு மின்விசிறி என்பன பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்திருந்தார்.

மட்டு மாவட்டத்திலுள்ள மக்களுக்கு இன, மத பேதமின்றி தனது சேவையினை அரச நிதியிலும், தனது சொந்த நிதியிலும் வழங்கி வரும் மாகாண சபை உறுப்பினர் தான் கொடுத்த வாக்குறுதியினை நிறைவேற்றும் முகமாக தனது சொந்த நிதியிலிருந்து தண்ணீர் தாங்கி, நீர் இறைக்கும் பம் (மோட்டர்), நீர் வினியோகத்தை பெறுவதற்கான குழாய் வசதி மற்றும் பாடசாலை அதிபரின் காரியாலயத்திற்கான மின்விசிறி என்பனவற்றை கொடுத்த வாக்குறுதிக்கமைவாக தனது சொந்த நிதியிலிருந்து பெற்றுக்கொடுத்தார்.

இதனை கையளிக்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக், கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளர் ஹைதர் அலி, பொருளாளர் றாஸி மற்றும் உறுப்பினர்களான றிபாஸ், உசைத் ஆகியோர் பாடசாலையின் அதிபர் ரவிச்சந்திரன், பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆகியோரிடம் 2016.07.18ஆந்திகதி (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.

மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்களுக்கு பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் அன்வர் (பிரதி அதிபர்) மற்றும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் தங்களது நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -