”இடமில்லாமல் போய் விடுமோ” பௌத்தர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது - மஹிந்த

அரசியல் அமைப்பில் பௌத்தர்களுக்கு இடமில்லாமல் போய் விடுமோ என்ற அச்சம் பௌத்தர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மொரட்டுவையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று எமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக பௌத்தர்கள் என்ற ரீதியில் எமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அரசியல் அமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடம் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. நாட்டின் அரசியல் அமைப்பு குறித்து கண்காணித்துக்கொண்டிருக்க வேண்டும்.

என்ன மாற்றங்கள் எவ்வாறு செய்யப்படுகின்றன. வார்த்தை விளையாட்டுக்களின் ஊடாக ஏதேனும் தீங்கு மேற்கொள்ளப்படுகின்றதா என்பது கண்காணிக்கப்பட வேண்டும்.வார்த்தைகளில் மூடி இந்த நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கப்படலாம்.

மேலும் போர்க் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களின் அடிப்படையாகக் கொண்டு படைவீரர்களை பலிகொள்ளும் செயற்பாடுகள் கிரமமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -