ஹம்பாந்தோட்டையில் ”நரேந்திர மோடி வீடமைப்புக் கிராமம்”...!

அஷ்ரப் ஏ சமத்-
ந்தியப் பிரதமா் நரேந்திர மோடியின் பெயரிலான ”நரேந்திர மோடி வீடமைப்புக் கிராமம்” ஹம்பாந்தோட்டை திஸ்ஸமகரமாவில் அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால் இன்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இதில் 315 வீடுகள் நிர்மாணிக்கபப்டுகின்றன. இந் நிகழ்வில் இந்திய துாதுவா் ஆலயத்தின் அதிகாரி ராஜ்குமாரும் கலந்து கொண்டாா். இத்திட்டத்திற்காக 789 இலட்சம் ருபா செலவிடப்படுகின்றது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கின்ற 42வது எழுச்சிக் கிராமமாகும். 2005 ஆம் ஆண்டு இலங்கை வந்த இந்தியப் பிரதமரிடம் பிரதமா், மற்றும் ஜனாதிபதி வீடமைப்புத்திட்டம் பற்றி பேசுகையில் சிங்கள மக்களுக்கான ஒரு நட்புரவு வீடமைப்புத் திட்டத்தினை தெற்கில் அமைப்பதற்கு கோரிக்கை விடுத்திருந்தனா். இதனை ஏற்றுக் கொண்ட பிரதமா் இத்திட்டத்திற்கு தான் உதவுவதாக வாக்குறுதி அளித்திருந்தாா்.

இவ் வீடமைப்புத்திட்டம் எதிா்வரும் நவம்பா் மாதத்தில் நிர்மாணப்பணிகள் பூர்திசெய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும். இத்திட்டத்திற்காக அரச காணிகள் சகல குடும்பங்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீடமைப்புக் கடன் மூலம் இத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இதில் நீர், மிண்சாரம், பாதை, மற்றும் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும். என அமைச்சா் சஜித் பிரேமதாச தெரவித்தாா்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -