நிந்தவூர் பள்ளிவாசல் மீள் புனர்நிர்மாணத்திற்கு உதவி கோரல்...!


சுலைமான் றாபி-

ஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டிய (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (விரிவுபடுத்தி)க் கட்ட எண்ணியபோது அது குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் (மக்களிடம்), 'நீங்கள் மிக அதிகமாகவே பேசிவிட்டீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யார் அல்லாஹ்வுக்காகப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான்' என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உபைதுல்லாஹ் அல்கவ்லானீ
நூல்கள் : புகாரி 450, முஸ்லிம் 926

நிந்தவூர் பிரதேசத்தில் காணப்படும் பள்ளிவாசல்களில் அதிக மஹல்லா வாசிகளைக் கொண்ட பள்ளிவாசலில் எமது மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலும் ஒன்றாகும். அந்த வகையில் இரண்டு மாடிகளைக் கொண்ட இப்பள்ளிவாசல் கடந்த (2015) வருடம் மீள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு கீழ் மாடிக்கான சகல வேலைகளும் பூர்த்தியடைந்த நிலையில் உள்ளது. இருந்த போதும் இதன் கீழ்மாடியிலேயே ஐவேளைத் தொழுகை, குர்ஆன் மதரசா மற்றும் மக்தப் ஆகிய வகுப்புக்களும் தற்போது இடம்பெறுகின்றது. 

மேலும், இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில்; ஜூம்மா நடைபெறக்கூடிய பள்ளிவாசலாகவும் மாற்றுவதற்கு மேல்மாடியைக் கட்டுவது அவசியமானதாகக் காணப்படுகின்றது. 

எனவே கருணை உள்ளம் படைத்தவர்களும், அல்லாஹ்வின் மாளிகையைக் கட்டுவதன் மூலம் சுவர்க்கத்தில் தனக்கும் ஒரு வீட்டைப் பெற்றுக் கொள்ள ஆசையாய் உள்ள ஒவ்வொருத்தரும் இப்பள்ளிவாசல் புனர் நிர்மாணத்திற்கு உதவிகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.  மேலதிக தொடர்புகளுக்கு எமது பள்ளிவாசல் நிர்வாகத்திடம் தொடர்பு கொள்ளவும்.


தலைவர் : 0094777481783
செயலாளர் : 0094775153272
பொருளாளர் : 0094757243985
வங்கி கணக்கு இலக்கம் : 296100180000572 (மக்கள் வங்கி – நிந்தவூர்)

வஸ்ஸலாம்.
இவ்வண்ணம்
செயலாளர்






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -