பருப்புடா....!

பருப்புடா....!
++++++++++++ 

ஆணுக்குப் பெண்ணின்றி
ஆகும் கஷ்டத்திலும்
பாணுக்குப் பருப்பின்றேல்
பாதிப்பு அதிகம்.

எங்கள் தேசத்தின்
இலக்ஷன் முடிவுகளில்
பருப்பு விலைகளே
துருப்பு சீட்டாகும்.

வெள்ளம் வந்தாலும்
வீடுகள் இழந்தாலும்
குறுப்பாகக் கூடி
பருப்பையே சமைப்பார்

கருப்பு சட்டிக்குள்
பருப்பு இருப்பதுவே
எல்லா ஹோட்டலுக்கும்
எழுதாத சட்டம்.

மைசூர் என்றதும்
மகா ராஜா வருமுன்னால்
மனசில் தோன்றுவது
மைசூர் பருப்பே.

பருப்பு சிறிதென்று
பல காலம் அறிந்தாலும்
'பெரிய' பருப்பாடா
பேச்சுக்கு கேட்பதன்
அருத்தம் தெரிந்தோர்கள்
ஐயா சொல்லுங்கள்.

பருப்பை உண்ணல்
பக்கா இலகு வேலை.
இருப்பினும் எதற்காக
பொறுப்பு வரும்போது
பருப்பு தின்னல் என்று
பலரும் கூறுகிறார்?

இருப்பில் உள்ள
பருப்பை ஒழித்து
கருப்பு சந்தையில்
ஹறாமாய் விற்பார்
ஏழைக்கு வந்த
இலவச பருப்பை.
அது
பருப்பு இல்லடா
நெருப்புடா.

இறப்பிருக்கு
பிறப்பிருக்கு
எத்தனை உண்மையோ
இருக்கும் வரை
பருப்பிருக்கும்
என்பதும் உண்மை.
Mohamed Nizous
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -