ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் சமன்மலி கலகலசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் யதாமினி குணவர்தனவை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெரியவருகிறது.
|
எதிர்வரும் 14ம் திகதி இந்த திருமணம் நடைபெறவுள்ளது. 2015ம் ஆண்டு கண்டியில் மகிந்த காற்று என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இவர்கள் இருக்கும் காதல் அரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமன்மலி கலகலசூரிய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தாதிஸ்ஸ கலகலசூரியவின் புதல்வி என்பதுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவின் உறவினருமாவார். தீவிர மகிந்த ராஜபக்ச ஆதரவாளரான அவர் தற்போது கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகித்து வருகிறார்.